scorecardresearch

எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஃபிக்ஸட் டெபாசிட்.. எதில் வட்டி அதிகம்?

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்தவரை மூத்த குடிமக்களுக்கு அதிகமான வட்டி கிடைக்கின்றன. பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்குகின்றன.

UCO Bank FD Interest Rates 2022 hiked by up to 135 bps
யூகோ வங்கி டிச.2ஆம் தேதிமுதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது.

மூத்த குடிமக்கள் பெரும்பாலும் குறைந்த அளவு அபாயத்துடன் கூடிய உறுதியான வருமானத்தை வழங்கும் திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
அதன்படி, வயதானவர்கள் பல முதலீட்டு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம், ஆனால் நிலையான வைப்புத்தொகைகள் (ஃபிக்ஸட் டெபாசிட்கள்) உறுதியான பாதுகாப்பான ரிட்டன்-ஐ வழங்குகின்றன.

சந்தை ஏற்ற இறக்கங்கள் முதலீட்டைப் பாதிக்காமல் வருமானம் ஈட்ட உதவுகின்றன.

வழக்கமான குடிமக்களை விட மூத்த குடிமக்கள் பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட்களில் (FD) அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.
கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களிலும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் கிடைக்கின்றன.

இதில் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழுள்ள தொகைக்கு 80TTB பிரிவின் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. அதன்படி மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் மூதலீடுக்கு ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு வட்டி வீதம் வழங்குகின்றன.

மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

வங்கிஆண்டு வட்டி விகிதம் ஃபிக்ஸட் டெபாசிட் காலம்
பொதுத்துறை வங்கிகள்
பேங்க் ஆஃப் பரோடா
6.654%5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
எஸ்.பி.ஐ.,
6.45%5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி
6.45%5 ஆண்டுக்குள் 10 ஆண்டுகள் வரை
பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி
6.30%2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுக்கு மேல்
கனரா வங்கி 6.25%3 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை
தனியார் வங்கி
ஆர்பிஎல் வங்கி
7.50%15 மாதங்கள்
யெஸ் வங்கி 7.50 3 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டு வரை
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
6.60%3 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டு வரை
ஐசிஐசிஐ வங்கி
6.60%3 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டு வரை
ஆக்ஸிஸ் வங்கி 1 ஆண்டு6.50%11 நாள்கள் முதல் 1 ஆண்டு 25 நாள்கள் வரை
சிறிய நிதி அல்லது நிறுவனங்கள்
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25%990 நாள்கள் அல்லது 75 வாரங்கள் முதல் 75 மாதங்கள் வரை
சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
7.99%999 நாள்கள்
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி7.75%888 நாள்கள்
பொதுத்துறை, தனியார், சிறிய வங்கிகளின் மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி ஒப்பீடு

இந்தத் தகவல்கள் 2022 செப்.15ஆம் தேதி நிலவரப்படி சேகரிக்கப்பட்டவை ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Senior citizen fixed deposit sbi vs hdfc vs icici vs axis bank vs others