Advertisment

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சிறந்த வட்டி: 7 வங்கிகளின் லிஸ்ட் இதோ

மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி தொடர்பாக 7 வங்கிகளின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Senior Citizen Long-Term Fixed Deposit Interest Rates

எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ உள்ளிட்ட 5 வங்கிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகின்றன.

மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் இந்த ஆண்டு உயர்ந்திருந்தாலும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால வைப்புகளில் பெரிய மாற்றம் இல்லை.

அதாவது எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ உள்ளிட்ட 5 வங்கிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வட்டியை மூத்த குடிமக்களுக்கு வழங்குகின்றன.

Advertisment

HDFC வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு நீண்ட கால நிலையான வைப்புகளில் 7.75% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அந்த வகையில், 2 கோடிக்கும் குறைவான 5 முதல் 10 வருட கால டெபாசிட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் குறியீட்டு மற்றும் வட்டி விகிதங்களில் உள்ள வங்கிகளின் பட்டியல் பின்வருமாறு:-

ஹெச்.டி.எஃப்.சி. வங்கி

HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 வருட நாள் முதல் 10 வருடங்கள் வரையிலான வைப்புகளுக்கு 7.71% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பந்தன் வங்கி

பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 6.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

கோடக் மகிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு மூத்த குடிமக்களுக்கு 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment