Stock Market Today: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (அக்.11) வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 843.79 புள்ளிகளும் (1.46 சதவீதம்), நிஃப்டி 17 ஆயிரத்துக்கு கீழும் வணிகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவில் வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ, 1.46 சதவீதம் வீழ்ச்சி கண்டு 57,147.32 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 257.45 புள்ளிகள் 1.49 சதவீதம் சரிந்து 16,983.55 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இரண்டு குறியீடுகளும் முந்தைய நாளில் சுமார் 0.25 சதவீதம் குறைவாக வர்த்தகத்தை தொடங்கின. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 57,050.40, நிஃப்டி 16,950.30 ஐயும் தொட்டது.
நிறைவாக வர்த்தகத்தில் 20 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் 0.68 சதவீதம் உயர்வு கண்டது. அடுத்து ஆக்ஸிஸ் வங்கி 1.15 சதவீதம் உயர்ந்தது. மற்ற பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
ஐ.டி நிறுவனங்களான ஹெச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் கடும் சரிவை கண்டன. இந்தப் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
அதேபோல் 50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில், அதானி என்டர்பிரைசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி லாபத்தில் வணிகமாகின.
தொடர்ந்து, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக வீழ்ச்சியுற்றன.
நெஸ்லே 3.50 சதவீதமும், மாருதி சுசூகி 2.01 சதவீதமும், டாடா ஸ்டீல் 2.76 சதவீதமும், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் 2.66 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.38 சதவீதமும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil