திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
வாரத்தின் முதல் நாளான இன்று (அக்.10), மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 200.18 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 57,991.11 என வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை 73.65 புள்ளிகள் சரிந்து 17,241 என வர்த்தகமாகின. இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஐ.டி. பங்குகள் ஓரளவு லாபம் ஈட்டின.
மும்பை பங்குச் சந்தையில், ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச். சி.எல். டெக், இந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ் பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
இதில் அதிகப்பட்சமாக ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் 2.76 சதவீதமும், டிசிஎஸ் பங்குகள் 1.84 சதவீதமும் லாபம் கண்டன.
தேசிய பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் அன்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் அதிகபட்ச நஷ்டத்தை சந்தித்தன.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பிரிட்டானியா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப் லாபகரமாக வணிகமாகின.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் பி.எஸ்.இ., 0.34 சதவீதமும், என்.எஸ்.இ., 0.43 சதவீதமும் சரிவை கண்டன. என்.எஸ்..இ.யில் அதிகபட்சமாக டாடா கன்சியூமர் பிராடக்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் 3 சதவீதம் சரிந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“