இன்றைய செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகத்தை நிறைவு செய்தன.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 578.51 (0.98%) உயர்ந்தும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 194 (1.10%) உயர்ந்தும் வணிகத்தை நிறைவு செய்தன.
50 பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தையில் கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், நெஸ்லே மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்ரீசிமெண்ட் நிறுவன பங்குகள் மட்டும் நஷ்டத்தை சந்தித்தன.
அதானி போர்ட், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், பிபிசிஎல், பிரிட்டானியா இந்தியா, சிப்லா, ஹெச்.சி.எல்., டெக், ஹெச்.டி.எஃப்.சி., லைப் இன்சூரன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், கோடக் மஹிந்திரா, எஸ்.பி.ஐ., டெக் மஹிந்திர உள்ளிட்ட இதர நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.
20 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில், இன்ஃபோசிஸ், நெஸ்லே, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தவிர மீதமுள்ள 16 பங்குகளும் லாபத்தில் வணிகமாகின.
இதில் அதிகப்பட்சமாக சன் பார்மா பங்குகள் ரூ.36.9 (4.22%) அதிகரித்து ரூ.911.45 ஆக உள்ளது. இதேபோல் டாக்டர் ரெட்டிஸ் லேப் பங்குகளும் அதிக லாபத்தை சந்தித்தன.
அந்த வகையில் அதிக லாபம் ஈட்டிய நிறுவன பங்குகளில் ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை தொடக்க வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச் சந்தை கிட்டத்தட்ட 300 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது.
அடுத்தடுத்த வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்வை கண்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil