திங்கள்கிழமை, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 இன்ட்ராடே புதிய சாதனை உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 347.9 புள்ளிகள் அல்லது 0.56% உயர்ந்து 62,641.54 ஆக உள்ளது. நிஃப்டி குறியீடு 90 புள்ளிகள் உயர்ந்து 18604.35 என்ற புதிய சாதனையை எட்டியது.
வங்கி நிஃப்டி உயர்வில் வர்த்தகம் செய்யப்பட்டு 43,020 இல் முடிந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபிசிஎல் பங்குகள் சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டின.
அதே நேரத்தில் நிஃப்டியின் துறை குறியீடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. நிஃப்டி மெட்டல் 1.19% குறைந்து காணப்பட்டது. இருப்பினும், நிஃப்டி ஆயில் & கேஸ் 1.36% உயர்ந்தது.
இன்றைய சிறந்த பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் நாளின் மிகவும் செயல்பட்ட பங்குகளாக காணப்பட்டன.
நிஃப்டி பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் இன்று அதிக லாபம் ஈட்டிய பங்குகள் பிபிசிஎல், ரிலையன்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா நுகர்வோர் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை அடங்கும். மறுபுறம், ஹிண்டால்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமனை, டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை குறியீட்டில் பின்தங்கின.
சென்செக்ஸ் பங்குகள்
ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் லாபத்திலும், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் சரிவையும் சந்தித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil