scorecardresearch

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4%க்கு மேல் உயர்ந்ததால் மிகப்பெரிய லாபம் ஈட்டியது.

Stock Market Today 30 May 2023
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.20 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்து 18,633.85 இல் முடிவடைந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகளின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 2022-23 நிதியாண்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 31) உலகச் சந்தைகளில் உறுதியான போக்கு குறியீட்டால் 2 சதவீதம் வரை உயர்ந்தன.

தொடர்ந்து, புதிய வெளிநாட்டு நிதி வரத்தும் பங்குச் சந்தையில் நேர்மறையான வேகத்தை அதிகரித்தது.
30-பங்குகளின் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1,031.43 புள்ளிகள் அல்லது 1.78 சதவீதம் அதிகரித்து 58,991.52 இல் நிறைவடைந்தது.
பகலில், இது 1,108.38 புள்ளிகள் அல்லது 1.91 சதவீதம் உயர்ந்து 59,068.47 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 279.05 புள்ளிகள் அல்லது 1.63 சதவீதம் உயர்ந்து 17,359.75 இல் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்ததால் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. நெஸ்லே, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை மற்ற முக்கிய வெற்றியாளர்களாகும்.

எனினும், சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை பின்தங்கின.
இதற்கிடையில், ஆசிய சந்தைகளில், சியோல், ஜப்பான், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.

தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.11 சதவீதம் குறைந்து 79.18 அமெரிக்க டாலராக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sensex rallies over 1000 points

Best of Express