Advertisment

சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு: ஊடக பங்குகள் ஏற்றம்!

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.75% உயர்ந்து 19,638.30 ஆகவும், மும்பை பங்குச் ச்நதை (BSE) சென்செக்ஸ் 320.09 புள்ளிகள் அதிகரித்து 65,828.41 ஆகவும் இருந்தது.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்வில் நிலைபெற்றன.

Share Market Today: இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 0.75% உயர்ந்து 19,638.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 320.09 புள்ளிகள் அதிகரித்து 65,828.41 ஆகவும் இருந்தது.

Advertisment

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்வில் நிலைபெற்றன.
வங்கி நிஃப்டி குறியீடு 283.60 புள்ளிகள் அல்லது 0.64% அதிகரித்து 44,584.55 ஆக இருந்தது.
தகவல் தொழில்நுட்பத்தைத் தவிர மற்ற துறை குறியீடுகள் உயர்வில் பரந்த அளவில் நிலைபெற்றன.
மருந்து, உலோகம், ஊடகம் மற்றும் நிதிச் சேவைப் பங்குகள் துறை சார்ந்த குறியீடுகளில் ஏற்றம் பெற்றன.

பார்மா பங்குகள்

வெள்ளிக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது நிஃப்டி பார்மா குறியீடு 430 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 15,455.95 ஆக இருந்தது. க்ளென்மார்க் பார்மா மற்றும் அரபிந்தோ பார்மா ஆகியவை முறையே 5.9% மற்றும் 5.73% முன்னிலை பெற்றன.

Plaza Wires IPO

பிளாசா வயர்ஸ் ஐபிஓ (Plaza Wires IPO) இன்று பொதுச் சந்தாவிற்காகத் திறக்கப்பட்டு அக்டோபர் 5, 2023 வியாழன் அன்று நிறைவடையும். பொது வெளியீட்டிற்கு முன்னதாக, Plaza Wires பங்குகளின் சாம்பல் சந்தை பிரீமியம் (GMP) 28% உயர்ந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment