scorecardresearch

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு இவ்ளோ வட்டியா? ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அசத்தல் அறிவிப்பு

12 மாதங்களில் முதிர்ச்சியடையும் பெண்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு NBFC 7.41% வரை வட்டி வழங்குகிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்க்கு இவ்ளோ வட்டியா? ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அசத்தல் அறிவிப்பு
புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஸ்ரீராம் குழுமத்தின் ஒரு அங்கமான இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வணிக வங்கி அல்லாத நிதி நிறுவனமான (NBFC), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) ஃபிக்சட் டெபாசிட் (ஸ்ரீராம் உன்னதி டெபாசிட்) விகிதங்களை சனிக்கிழமை (டிச.31) உயர்த்தியது.

புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. NBFC ஆனது 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்தைப் பொறுத்து பல்வேறு FDகளுக்கு 7.30% முதல் 8.45% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும், மூத்த குடிமக்களுக்கு FD களில் 0.50% கூடுதல் வட்டி விகிதங்கள் உள்ளன. எனவே மூத்த குடிமக்கள் ஜனவரி 1, 2023 முதல் 7.83% முதல் 8.99% வரை பெறுவார்கள்.
ஸ்ரீராம் NBFC பெண்களுக்கு டெபாசிட் திட்டங்களில் கூடுதலாக 0.10% வழங்குகிறது. எனவே, அவர்களுக்கான பயனுள்ள வட்டி விகிதங்கள் 7.41% முதல் 8.55% வரை இருக்கும்.

உங்கள் FDகளை நீங்கள் புதுப்பித்தால், வாடிக்கையாளர்கள் 0.25% கூடுதல் வட்டியை சாதாரண வட்டியுடன் சேர்த்துப் பெறலாம். வெவ்வேறு தவணைக்காலங்களின் அனைத்து FDகளுக்கும் அவை பொருந்தும்.
அந்த வகையில், 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு NBFC 7.30% வரை வட்டி வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் FDகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு 8.27% வட்டி விகிதம் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள்
12 மாதங்களில் முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் FDகளுக்கு 7.83% வரை வட்டி வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் FDகளைத் தேர்ந்தெடுக்கும் மூத்த குடிமக்கள் 8.79% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

பெண்கள்
12 மாதங்களில் முதிர்ச்சியடையும் பெண்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு NBFC 7.41% வரை வட்டி வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் FDகளைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு 8.55% வட்டி விகிதம் கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Shriram finance hikes interest rates on fixed deposits

Best of Express