இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (செப்.14) பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் பி.எஸ்.இ., சென்செக்ஸ் 224.1 (0.37 சதவீதம்) வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் என்.எஸ்.இ., நிஃப்டி, 66.3 (0.37) சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி., வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிக லாபத்தில் வர்த்தகமாகின.
அதேபோல், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்.சி.எல்., டெக் மற்றும் இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சிப்லா, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபத்திலும் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் பெரும் நஷ்டத்தையும் சந்தித்தன. பட்டியலிடப்பட்ட 50 பங்குகளில் 28 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil