Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: இந்த வங்கியை நோட் பண்ணுங்க!

சூர்யோடே ஸ்மால் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senior citizens can get up to 8 PC interest with HDFC Fixed Deposit

புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 7, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SSFB) ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 7, 2023 முதல் அமலுக்கு வருகின்றன.

Advertisment

மேலும் இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, வங்கி பொது மக்களுக்கு 4.00 சதவீதம் முதல் 8.60 சதவீதம் வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 4.50 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரையிலும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்குகிறது.

அதிகபட்சமாக 8.60 சதவீதம் வட்டி விகிதம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். இதற்கு முன், இதே காலக்கட்டத்தில், 9.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டது.

எனினும், ஸ்மால் வங்கிகளை பொறுத்தவரை ரூ.5 லட்சத்துக்குள்ளான முதலீட்டுக்கு மட்டுமே காப்பீடு பொருந்தும். இது தொடர்பாக வங்கிக் கிளைகளில் முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்வது சிறந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment