எஸ்பிஐ ஏடிஎம் கார்டு: இந்த முக்கிய விஷயத்தை தெரியாம இருக்காதீங்க!

State Bank Update : தொலைந்துபோன ஏடிஎம் கார்டை பிளாக் செய்யவும், புதிய கார்டை பெறுவதற்கும் எஸ்பிஐ வங்கியின் எளிய வழிமுறை

Tamil Business Update SBI ATM/Debit Card : எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அந்த கார்டை பிளாக் செய்வதற்கும், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கும் எஸ்பிஐ எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

பயணத்தின்போது உங்கள்  டெபிட் கார்டை தொலைத்துவிட்டால், அந்த கார்டை பிளாக் (BLOCK) செய்வற்கும் அது கார்டை மீண்டும் பெறுவதற்கும் பெரும் சிரமங்களை சந்திக்வேண்டி இருக்கும். மேலும் வளர்ந்து வரும் சைபர் கிரைம் மூலம், தொலைந்துபோன உங்கள் ஏடிஎம் / டெபிட் கார்டு தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  இந்த நிலைகளை தவிர்பதற்காக, நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் / டெபிட் கார்டை ஆஃப்லைன், ஆன்லைனில் அல்லது அதன் யோனோ ஆப் மூலம் பிளாக் செய்து புதிய கார்டை மீண்டும் பெரும் வசதியை எளிமையாக மாற்றுகிறது.

இந்த எளிய வழிகளில் எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டை பிளாக் செய்து எளிய செயல்முறையின் மூலம் மீண்டும் புதிய கார்டு பெறும் வகையில் வசதிசெய்யப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் வழியாக (Via SMS)

உரை (Text Msg) வழியாக உங்கள் ஏடிஎம் கார்டை தடுக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “பிளாக் XXXX”  என டைப் செய்து 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். இங்கே, XXXX என்பது உங்கள் எஸ்பிஐ கார்டின் கடைசி நான்கு இலக்கங்களைக் குறிக்கிறது.

தொலைபேசி அழைப்பு வழியாக

எஸ்பிஐயின் 24 * 7 ஹெல்ப்லைன் எண்களை இந்தியாவில் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்கள் வழியாக அணுகலாம்.

-1800 11 2211 (கட்டணமில்லாது)

-1800 425 3800 (கட்டணமில்லாது)

-080 2659 9990

இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அழைத்து உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது தொடர்பான கோரிக்கையை எழுப்புவதற்கான நடைமுறையைப் பின்பற்றலாம்.

யோனோ (SBI YONO) பயன்பாடு வழியாக

நீங்கள் எஸ்பிஐ யோனோ மொபைல் அப் மூலம் உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி  உள்நுழைக. இப்போது ‘சேவை கோரிக்கை’  (Service Requset)விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து பிளாக் ஏடிஎம் / டெபிட் கார்டைக் (Block ATM/Debit Card) கிளிக் செய்க. உங்கள் இணைய வங்கி சுயவிவர கடவுச்சொல்லை (Passward)உள்ளிட்டு தொடரவும். இப்போது அட்டை தொடர்புடைய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘அட்டை எண்’ மற்றும் ‘அட்டையை பிளாக் செய்வதற்கான காரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அட்டையை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் பிளாக் செய்யும் விருப்பம் உங்களுக்கு உள்ளது.

4. ஆன்லைன் வங்கி வழியாக

Www.onlinesbi.com இல் உள்நுழைக. ‘மின் சேவைகள்’ (e.Serivice) தாவலின் கீழ், ‘ஏடிஎம் கார்டு சேவைகள்’> ‘ஏடிஎம் கார்டை பிளாக்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அந்த அட்டை தொடர்புடைய வங்கி கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, ​​நீங்கள் தடுக்க விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுத்து, ‘கார்டைத் தடுப்பதற்கான காரணத்தை’ தேர்வு செய்யவும். அடுத்து விவரங்களைச் சரிபார்த்து, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்க.

அடையாள அங்கீகாரத்திற்காக எஸ்எம்எஸ் ஓடிபி அல்லது சுயவிவர கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க. SMS OTP அல்லது சுயவிவர கடவுச்சொல்லை உள்ளீடு செய்து ‘உறுதிப்படுத்து’ என்பதைக் கிளிக் செய்க. வெற்றிகரமாக சமர்ப்பிக்கும் போது ஒரு டிக்கெட் எண் காண்பிக்கப்படும்,

5. புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

Www.onlinesbi.com இல் உள்நுழைக. ‘மின் சேவைகள்’ தாவலின் கீழ், ‘ஏடிஎம் கார்டு சேவைகள்’> ‘ஏடிஎம் / டெபிட் கார்டைக் கோருங்கள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடையாள அங்கீகாரத்திற்கு SMS OTP அல்லது சுயவிவர கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க. SMS OTP அல்லது சுயவிவர கடவுச்சொல்லை உள்ளிட்டு ‘உறுதிப்படுத்து’ என்பதைக் கிளிக் செய்க. அட்டை வழங்கப்பட விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

-நீங்கள் அட்டையில் அச்சிட விரும்பும் பெயரை உள்ளீடு செய்து அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க. அடுத்த பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்க. உங்கள் புதிய எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டை பதிவு செய்யப்பட்ட முகவரியில் 7-8 வேலை நாட்களில் பெற முடிவும்.

6. யோனோ ஆப் வழியாக புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

யோனோ ஆப் மூலம் உள்ளே நுழைந்து ‘சேவை கோரிக்கை’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ‘புதிய / மாற்றுக் கோரிக்கை’ (Request NEW/Replacement) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘கணக்கை’ தேர்ந்தெடுத்து, உங்கள் அட்டையில் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும். அனுப்ப ஒரு முகவரியைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு. OTP ஐ உள்ளிட்டு தொடரவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil business update sbi atm debit card new or replacement

Next Story
ஒரு SMS போதும்: SBI மினி ஸ்டேட்மென்ட் பெறுவது இவ்ளோ சுலபமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com