இந்தியாவில் மிகவும் மலிவான எலெக்ட்ரானிக் கார்களாக டாடா டியாகோ கார்கள் விற்பனையை தொடங்கியுள்ளன. இந்தக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், 315 கிலோ மீட்டர் வரை தொந்தரவின்றி பயணிக்கலாம்.
தற்சமயம் நாட்டிலேயே மிக மலிவான கார்கள் இவையாகும். இந்தக் கார்களின் விலை ரூ.8 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேர் முன்பதிவு
இந்த நிலையில் தற்சமயம் வரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கார்களுக்கு புக்கிங் செய்து காத்திருக்கின்றனர்.
இந்த முன்பதிவு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. அப்போது ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கார்களுக்கு முன்பதிவு செய்திருந்தனர்.
பேட்டரி அளவு
புதிய Tiago EV இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக்குகளைப் பெறுகிறது: 19.2 kWh அலகு மற்றும் 24 kWh பதிப்பு. அவை முறையே 60 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை உருவாக்குகின்றன.
மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 முதல் 315 கிமீ வரை பயணிக்கலாம். இதுமட்டுமின்றி, வேகமான சார்ஜர் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும், சாதாரண சார்ஜிங்கிற்கு 8.7 மணிநேரம் ஆகலாம்.
விலைகள்
அனைத்து புதிய Tata Tiago EV இன் அறிமுக விலைகள் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரை உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/