scorecardresearch

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன தெரியுமா?

பிரீமியங்களில் உள்ள வேறுபாடு கணிசமானது. வாழ்க்கையின் ஆரம்பத்தில் திட்டத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிப்பீர்கள்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன தெரியுமா?

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இது எந்தவொரு நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்காத ஒரு திட்டம்.  ஆனால் சில காப்பீட்டு நிறுவனங்கள் அதிரடி பிளான்களுடன் கூடிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களை அறிமுகப்படுத்திய பிறகு அனைத்தும் மாறியது. வாடிக்கையாளர்களும் டேர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இப்போது பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களைப் பயன்படுத்துகின்றன. டேர்ம் இன்ஷூரன்ஸ் பொறுத்தவரை, பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வசதி மற்றும் எளிமையை கொண்டுள்ளன. இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தை எடுப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மிக முக்கியமானவற்றை பட்டியலிடுகிறோம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வாங்க வேண்டிய முதல் 5 காரணங்கள்

1. இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறந்த பாதுகாப்பாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த நிதி மற்றும் மன பாதுகாப்பை வழங்குவதற்கு இந்த திட்டத்தை போல வேறு எந்த நிதி திட்டத்திலும் இதுபோன்ற அம்சங்கள் இல்லை என்று நினைக்கிறோம். இது வேண்டாம் என்று நினைத்தால், ஒரே சிறந்த வழி, வங்கியில் நிறைய பணம் சேமிப்பது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை செய்ய நம்மில் பெரும்பாலானோருக்கு நிறைய நேரம் எடுக்கும்.

அப்படி சேமித்து வைத்திருந்தாலும், அவை வாழ்க்கையின் சில முக்கியமான நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும். வீட்டுக் கடன், குழந்தையின் கல்வி, கார், திருமணம், மருந்துகள், வீட்டு சீரமைப்பு என்று செலவினங்கள் நீண்டு கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், உங்கள் ஓய்வூதிய வயது வரை உங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தால் மட்டுமே இவை அனைத்தும் நடக்கும்.

எனவே, திடீரென ஏற்படும் எந்தவொரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கும் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வாறு திட்டமிடுகிறார் என்றால் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் எடுப்பதன் மூலமே. 30 வயதான நபர் ஒருவர், 1 கோடி ரூபாய் க்கான கவர் பிளானை 30 வருட காலத்திற்கு ஆண்டுக்கு 7,788 ரூபாய் என்கிற வீதம் எடுக்க முடியும். உங்கள் குடும்பத்திற்கு உறுதியான பாதுகாப்பை வழங்க ஒருவர் பணம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

2.நீங்கள் இளமையாக இருக்கும்போதே வாங்கினால் இது இன்னும் மலிவானது!

நீங்கள் இளமையாக இருக்கும்போதே டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்குவது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 30 வருடங்களுக்கு ரூ.1 கோடி கவர் பிளானுக்கு இதை மாதிரி செய்யுங்கள்.

வயது 30 – ஆண்டு பிரீமியம் ரூ. 7,788
வயது 35 – ஆண்டு பிரீமியம் ரூ. 9,912
வயது 40 – ஆண்டு பிரீமியம் ரூ. 13,216
வயது 45 – ஆண்டு பிரீமியம் ரூ. 17,700

பிரீமியங்களில் உள்ள வேறுபாடு கணிசமானது. வாழ்க்கையின் ஆரம்பத்தில் திட்டத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிப்பீர்கள்.

3. விலை குறைவாக இருக்கலாம், ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யக்கூடியவை

பிரீமியங்கள் குறைவாக இருப்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் ஆபத்தானவை என்று கருதும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை வழங்குவதில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. வயதுக்கு ஏற்ப, வாழ்க்கை முறை நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் மிக அதிகம். நம்முடைய வேலைகளின் தன்மை மற்றும் நம் வாழ்வின் வேகம் காரணமாக நாம் அனைவரும் நோய்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏதேனும் நோய் ஏற்பட்ட பிறகு இன்சூரன்ஸ் எடுக்க நினைத்தால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களிடம்  மிகவும் தயக்கம் காட்டும் அல்லது உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வைத்து பிரீமியங்களை அதிகரிக்கும் என்பதால் பாலிசி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

4.ரைடர்களுக்கு மற்ற பிளான்களை காட்டிலும், இறப்பு காப்பீடு மிகவும் முக்கியமானது

உயிர் இழப்பு இல்லாமல் வருமானம் நிற்கும் பாலிசிகளை நீங்கள் எடுக்க வேண்டும். இது மிக மோசமான சூழ்நிலை – இது செலவினங்களை அதிவேகமாக சேர்க்கிறது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முழு வருமான இழப்புடன் வருகிறது. சிக்கலான நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் இயலாமை போன்ற சம்பவங்களில் இருந்து ரைடர்ஸ்களை இந்த பிளான் காப்பாற்றும். உங்கள் அடிப்படை தொகையை அதிகரிக்க இந்த கவர் பிளான்கள் பரிந்துரைக்கபடுகின்றன.

5. ஸ்மார்ட் நெகிழ்வான விருப்பங்கள்

• 99 வயது வரை கவர் செய்யும். இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பரிசை விட்டுச்செல்லும் வாழ்க்கை.

• குறைந்தபட்ச கவர் பிளான்- இதில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், மீதமுள்ள பாலிசி காலத்திற்கான கவர் தொகையை தொடர்ந்து அனுபவிக்கலாம். உங்களுக்கு இப்போது ஒரு நல்ல வேலை இருக்கிறது என்றால், பிரீமியங்களை செலுத்தி, நீங்கள் வாங்கும்போது அதை முடிக்கலாம். இப்போதெல்லாம் வேலை பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது என்பதால் இந்த பிளான் கைகொடுக்கும்.

• 60 வயது வரை செலுத்துங்கள் -இது மற்றொரு நல்ல திட்டமாகும். இது ஒரு வரையறுக்கப்பட்ட ஊதிய விருப்பத்தின் மாறுபாடு. ஓய்வு பெற்றதும், வருமானம் நின்றுவிட்டதும் யாரும் பிரீமியம் செலுத்த விரும்பமாட்டார்கள்? எனவே, நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு பிரீமியங்களை முடிக்க இத்திட்டம் உதவும்.

இன்னும் காப்பீட்டு திட்டத்தை வாங்குவதில் இப்போதும் நம்பிக்கை இல்லையா? உங்களுக்காக வரி சேமிப்புகளும் உள்ளன – பிரீமியங்கள் மற்றும் செலுத்துதல்கள் வரி விலக்கு!

(கட்டுரை ஆசிரியர்: தீபக் யோஹன்னன், மை இன்சூரன்ஸ் கிளப்பின் தலைமை நிர்வாக அதிகாரி.)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Term insurance benefits why term insurance schemes are more popular

Best of Express