டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை பெறுவது வாழ்க்கை நிலைகளை வழிநடத்துவதோடு, வாழ்க்கை இலக்குகளை அடைவதையும் மிகவும் எளிதாக்குகிறது. எனவே, டெர்ம் இன்சூரன்ஸ் மூலம் பாதுகாப்பை பெறுவது, பெரும்பாலும் நிதி திட்டமிடல் செயல்பாட்டின் முதல் படியாக கருதப்படுகிறது.
இளம் பருவத்தில் மரணத்தை சந்திக்கும் போது தான் வாழ்க்கையின் கோர முகம் வெளிப்படுகிறது. டெர்ம் இன்சூரன்ஸ் மூலம் இந்த ஆபத்தை மிகச் சிறந்த முறையில் ஒருவரால் நிர்வகிக்க முடியும். குறைந்த விலை, அதிக பாதுகாப்பு போன்ற காரணங்களால் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் சரியான தேர்வாக அமைகிறது.
விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள, முதலில் அடிப்படைகளைப் பார்ப்போம்.
டெர்ம் இன்சூரன்ஸ் என்பது ஆயுள் காப்பீட்டு பாலிசி வகைகளில் ஒன்றாகும். இதில், பிரீமியத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட காலம் பாலிசிதாரர் பாதுகாப்பை பெறலாம். பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் அவரது வாரிசுக்கு பலன் கிடைக்கும். அதே நேரத்தில் டெர்ம் இன்சூரன்ஸ் கால முடிவில் காப்பீடு எடுத்தவர் உயிரோடு இருக்கையில், அவருக்கு எந்த பலனும் வழங்கப்பட மாட்டாது.
மற்ற அனைத்து வகையான காப்பீட்டு வகைகளை ஒப்பிடும்போது, இதில் காப்பீட்டுத் தொகை மிகக் குறைவாகும். பொதுவாக, இத்திட்டத்தில் இளம் வயதினரை விட முதியவர்களுக்கு கூடுதல் காப்பீட்டுத் தொகை இருக்கும்.
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் கல்வி மற்றும் இதர தேவைகள், குடும்பத்திற்கு நிதி ஆதரவு போன்றவற்றை பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது.
நமது நிதி விவகாரத்தில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் ஏன் முக்கிய இடத்தைப் பெறுகிறது என தெரியுமா? பதில் - நிதி இடர் மேலாண்மை. ஆபத்து மதிப்பீட்டிற்கு ஏற்ப ஒருவர் ஸ்டாக் (பங்கு) மற்றும் டெப்ட் (சந்தை கடன்கள்) போன்றவற்றில் ஒருவர் முதலீடு செய்கிறார். இருப்பினும், பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட பல முதலீடுகளும் சுயம் சார்ந்த நிதியாகும். அவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர் உயிருடன் இருக்க வேண்டும்.
எனவே, டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு, நமது வாழ்க்கை குறிக்கோள்கள் தடம் புரளாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு பயனளிக்கிறது. வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு நிதியுதவியை உறுதிபடுத்துகிறது.
இப்போது, டெர்ம் இன்சூரன்ஸ் கொள்கையின் முக்கியத்துவம் புரிந்திருப்பதால், அவற்றை யார் வாங்க வேண்டும் என்று பார்ப்போம்:
நடைமுறையில் அனைவருக்கும் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் தேவை. அதாவது, பொருளாதார சூழலை சார்ந்து வாழ்கையை வழிநடத்தும் எவருக்கும் இத்தகைய பாலீசி தேவைப்படுகிறது. யார் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்களோ மற்றும் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுகிறார்களோ அவர்களுக்கு ஆயுள் காப்பீடு தேவை.
தவணைகளை ஒப்பிடுங்கள். உங்கள் குடும்பத்திற்கான சிறந்த டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை MyInusuranceClub -ல் பெறலாம்.
இந்தக் கட்டுரையின் ஒரிஜினல் வடிவத்தை இங்கு காணலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"