பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது “சுகம் டெர்ம் டெபாசிட்கள்” திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் முதிர்ச்சிக்கு முன் எந்தத் தொகையையும் திரும்பப் பெற அனுமதிக்கிறது.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் திரும்ப பெற அனுமதிக்கிறது. இது குறித்து வங்கியின் இணையதளத்தில், “எந்தவொரு டெபாசிட்டரும் முதிர்வுக்கு முன் முழு டெபாசிட்டையும் திரும்பப் பெற விரும்பினால், அபராதம் விதிக்கப்படாது மற்றும் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் ஒப்பந்த விகிதமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி எஃப்.டி வட்டி
பஞ்சாப் நேஷனல் வங்கி சுகம் டெர்ம் டெபாசிட்கள் திட்டத்துக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ரூ.2 கோடிக்கும் குறைவான மற்ற வைப்புகளுக்கு 7-14 நாள்களுக்கு பொதுமக்களுக்கு 3.5 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 4 சதவீதமும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 4.3 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
இதில் ஓராண்டுக்கு பொதுமக்களுக்கு 5.8 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.3 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.6 சதவீதமும் வட்டி கிடைக்கிறது.
அதிகப்பட்சமாக 2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள்ளான வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 6.5 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.25 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.8 சதவீதமும் வங்கி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“