Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.10 சதவீதம் வட்டி: இந்தத் தனியார் வங்கியை பாருங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்கும் தனியார் வங்கி குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
1 2 year post office time deposits vs bank fixed deposits

இந்த ஸ்மால் வங்கி மூத்தக் குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Fixed Deposit Scheme: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. இதனால், ஒரு தனியார் வங்கி மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

தற்போது அந்த வங்கி, மூத்தக் குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது. மேலும், பொதுமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

Advertisment

இந்த வட்டியை வழங்கும் வங்கி சூர்யோதாய் சிறு நிதி வங்கி ஆகும். ஒரு தனியார் சிறிய வங்கி என்றாலும், இந்த வங்கி மற்ற வங்கிகளைப் போலவே ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் விதிகள் மற்ற வங்கிகளைப் போலவே இருக்கும்.

இந்த வட்டி விகிதம் ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும். பல்வேறு வங்கிகள் மற்றும் NBFCகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களுடன் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன.

இதேபோல், சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 2-3 ஆண்டுகளுக்கு FDகளில் 9.10% வட்டியை வழங்குகிறது. இந்த வழக்கில், பொது வாடிக்கையாளர்களுக்கு 8.6 சதவீத வட்டி கிடைக்கும்.

வங்கி வட்டி விகிதம்

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 நாள்கள் முதல் 14 நாட்களுக்கு நிலையான வைப்புகளுக்கு 4.50 சதவீத வட்டியை வழங்குகிறது.

வட்டி விகிதம் 15-45 நாள்களுக்கு 4.75 சதவீதம் ஆகும். தொடர்ந்து, 46-90 நாள்கள் FD மீதான வட்டி விகிதம் 5 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து வட்டி விகிதம் 91 நாள்கள் முதல் 6 மாதங்கள் வரை 5.50 சதவீதம் ஆகவும், 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான கால வைப்புகளுக்கு வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment