ரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்

கொரோனா பரவலைத் தடுக்க முககவசம் அணிவது கட்டாயமாகியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் என நடிகர்களின் படம் போட்ட முகக்கவசங்களை தயாரித்து வருகிறது. இதனால், நடிகர்கள் படம் அச்சிடப்பட்ட முகக்கவசங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Tirupur textile companies producing actor picture masks, திருப்பூர், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், actors masks, rajinikanth mask, kamal haasan mask, vijay mask, ajith mask, ரஜினி முகக்கவசம், விஜய் முகக் கவசம், அஜித் முகக் கவசம், rjini pictured masks, vijay pictured masks, ajith picutured masks, coronaviurs, lock down, tirupur, tirupur baniyan company

தமிழகத்தின் திருப்பூர் நகரம் பின்னலாடை உற்பத்திக்கு புகழ்பெற்ற நகரம். தற்போது கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள பின்னலாடை தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவ ஆடைகள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகளை தயாரித்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றன

கொரோனா அச்சுறுத்தலால் அமலில் இருந்த பொது முடக்கத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில இளைஞர்கள் இன்னும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். இந்த நிலையில் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில், முகக் கவசங்களில் புதுமைகளை பின்னலாடைகள் மூலமாக முககவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது குறித்து பல முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடம் புதுமையான சாம்பிள் முக கவசங்களைத் தயாரித்து அளிக்க கோரியுள்ளன.

இதன்படி, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தயாரித்த நடிகர்கள் படம் போட்ட முகக்கவசங்களை தயாரிக்க இறங்கியுள்ளன. குறிப்பாக நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய், விருப்பமான நடிகர்கள் படம் மற்றும் அவர்களின் பகுதி முகம் அச்சிடப்பட்ட முக கவசங்களுக்கு கடுமையான கிராக்கி இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tirupur textile companies produced rajinikanth kamal haasan vijay ajith pictured masks

Next Story
ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்புelection 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com