scorecardresearch

இந்தியன் வங்கி, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்; இ-சேவை கட்டணத்தை எளிதாக செலுத்த ஏற்பாடு

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சேவைகளில் எளிதான அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான விநியோகத்தை செயல்படுத்துகிறது

TNeGA and Indian Bank sign with MoU
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளின் இ – சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட முடியும்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) இந்தியன் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், யுபிஐ பேமெண்ட் வாலட்கள், நெட் பேங்கிங், இ-சலான்கள் மற்றும் யூபிஐ போன்ற பல கட்டணச் சேவைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் சமரசச் சேவைகள் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் இந்த தளம் உதவுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (ஐடி & டிஎஸ்) மாநில அமைச்சர் மனோ தங்கராஜ், ஐடி மற்றும் டிஎஸ் செயலாளர் ஜே குமரகுருபரன் மற்றும் இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் மகேஷ் குமார் பஜாஜ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இது தொடர்பாக மகேஷ் குமார் பஜாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சேவைகளில் எளிதான அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான விநியோகத்தை செயல்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம், தமிழ்நாடு அரசுத் துறைகளின் இ – சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tnega and indian bank sign with mou

Best of Express