மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. 2022 டிசம்பரில், மிட்கேப் ஃபண்டுகள் ரூ.1,962.26 கோடி வரவைக் கண்டுள்ளன.
மேலும், மிட்கேப் ஃபண்டுகள் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்ட வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை அளித்துள்ளன. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி கண்ட மிட்கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 மிட்கேப் நிதிகள்
1) எடெல்வீஸ் மிட் கேப் ஃபண்ட்
எடெல்வீஸ் மிட் கேப் ஃபண்ட்டின் நேரடித் திட்டம் 10 ஆண்டுகளில் 20.39% வருடாந்திர வருவாயை அளித்துள்ளது, அதே நேரத்தில் திட்டத்தின் வழக்கமான திட்டம் 18.96% வருமானத்தை அளித்துள்ளது.
2) கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்
கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டின் நேரடித் திட்டம் 10 ஆண்டுகளில் 19.92% வருடாந்திர வருவாயைக் கொடுத்துள்ளது, அதே நேரத்தில் திட்டத்தின் வழக்கமான திட்டம் 18.50% வருமானத்தை அளித்துள்ளது.
3) இன்வெஸ்கோ இந்தியா மிட் கேப் ஃபண்ட்
இன்வெஸ்கோ இந்தியா மிட் கேப் ஃபண்டின் நேரடித் திட்டம் 10 ஆண்டுகளில் 19.37% வருடாந்திர வருவாயை அளித்துள்ளது, அதே நேரத்தில் திட்டத்தின் வழக்கமான திட்டம் 17.56% வருமானத்தை அளித்துள்ளது.
4) HDFC மிட்-கேப் வாய்ப்புகள் நிதி (HDFC Mid-Cap Opportunities Fund)
HDFC மிட்-கேப் வாய்ப்புகள் நிதியின் நேரடித் திட்டம் 10 ஆண்டுகளில் 19.37% வருடாந்திர வருவாயை அளித்துள்ளது, அதே நேரத்தில் திட்டத்தின் வழக்கமான திட்டம் 18.43% வருமானத்தை அளித்துள்ளது.
5) எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட்
எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் ஃபண்டின் நேரடித் திட்டம் 10 ஆண்டுகளில் 19.02% வருடாந்திர வருவாயை அளித்துள்ளது, அதே நேரத்தில் திட்டத்தின் வழக்கமான திட்டம் 17.93% வருமானத்தை அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/