அனைத்து வயது பயணிகளுக்கும் ஏற்ற போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து திகழ்கிறது. இந்த நிலையில் ஐஆர்சிடிசி புதிய திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது பயணம் செய்யும் டிக்கெட் காசை பின்னர் கொடுங்கள் என்பதுதான் அந்தத் திட்டம். அதாங்க, Travel Now Pay Later. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளன.
அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பொருளை தற்போது வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம். இதேபோன்று திட்டத்தில்தான் ஐஆர்சிடிசியும் தற்போது கவனம் செலுத்திவருகிறது.
இந்தத் திட்டத்தில் கூடுதலாக சிறப்பம்சம் ஒன்றும் உள்ளது. நாம் கடனாக திருப்பி செலுத்தும் பணத்துக்கு வட்டி கிடையாதாம். ரயில் டிக்கெட் என்ன விலையோ அந்த விலையை திருப்பிக் கொடுத்தால் போதுமாம்.
இந்தத் திட்டத்தில் முதலில் பயிற்சி முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஐஆர்சிடிசி மூலம் தினந்தோறும் 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil