Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய யூகோ வங்கி... அசத்தல் திட்டங்கள் இங்கே!

UCO வங்கியில் 444 & UCO 666 ஆகிய இரண்டு தனித்துவமான கால வைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

author-image
Jayakrishnan R
New Update
Booking Fixed Deposit

யூகோ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பொதுத்துறையின் முன்னணி கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான யூகோ வங்கி ரூ.2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விகிதங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு, நவம்பர் 8, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Advertisment

அதன்படி, வங்கி FD வட்டி விகிதங்களை 45 bps வரை உயர்த்தியுள்ளது. வங்கி தற்போது 7 நாட்களில் இருந்து 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 2.90 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை பொது மக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கு 3.15 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலும் வழங்குகிறது.

மேலும், 2 கோடிக்கும் குறைவான உள்நாட்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 08.11.2022 முதல் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, 7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் (bps) 2.55 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக வங்கி உயர்த்தியுள்ளது.

மேலும் 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கான வட்டி விகிதத்தை 20 bps ஆக வங்கி 2.8ல் இருந்து உயர்த்தியுள்ளது. தொடர்ந்து, 46 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் FD களுக்கு, UCO வங்கி இப்போது 3.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அதே நேரத்தில் அடுத்த 91 முதல் 180 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு, வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 3.7 சதவீதத்தில் இருந்து 3.75 ஆக அதிகரித்துள்ளது.
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு இப்போது 5.75 சதவீத வட்டி கிடைக்கும், இது முன்பு 5.3 சதவீதமாக இருந்தது.

அதாவது தற்போது, 45 பிபிஎஸ் வரை உயர்வு ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான FD களுக்கு, பொதுக் கடன் வழங்குபவர் 5.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதிர்ச்சியடையும் FDகளில், UCO வங்கி வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகளால் 5.3 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றிUCO வங்கி ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு 1 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களான முன்னாள் தொழிலாளர்களுக்கு 1.5 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
மேலும், UCO வங்கியில் 444 & UCO 666 ஆகிய இரண்டு தனித்துவமான கால வைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காலம், 444 மற்றும் 666 நாட்கள் ஆகும். இந்த திட்டம் டிசம்பர் 31, 2022 வரை செல்லுபடியாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment