பிரேமத்துக்கு பெயர் பெற்ற கேரளா, இப்போது ரயில் ஸ்நேகம் ஆகிறது....

Silver line project in Kerala : இந்திய ரயில்வே மற்றும் கேரள அரசின் கே.ரயில் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள சில்வர்லைன் புராஜெக்ட் திட்டத்தின் மூலம்,...

Vishnu Sharma

இந்திய ரயில்வே மற்றும் கேரள அரசின் கே.ரயில் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள சில்வர்லைன் புராஜெக்ட் திட்டத்தின் மூலம், ரயில் போக்குவரத்துக்கு உகந்த மாநிலமாக கேரளா திகழ உள்ளது.

கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள காசர்கோடு பகுதியில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள கொச்சுவிலி (திருவனந்தபுரம்) வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை திட்டத்திற்காக செயல்படுத்தப்பட உள்ள சில்வர் லைன் புராஜெக்ட்டிற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இந்த வழித்தடத்தில் ஆகும் பயண நேரம் 12 மணிநேரங்களில் இருந்து 4 மணிநேரங்களாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

சில்வர் லைன் திட்டத்தின் அவசியம் என்ன?

கேரள மாநிலத்தில் பீக் ஹவர்களில் சாலைகளில் பயணிக்கும் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. மாநிலத்தின் 10 சதவீதம் அளவே உள்ள சாலைகளில், 80 சதவீத மக்கள் தங்கள் போக்குரவத்துக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக சாலைவிபத்துக்கள் தெடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2018ம் ஆண்டில், சாலைவிபத்துகளில் சிக்கி 4,259 பேர் மரணமடைந்திருந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கேரள மக்கள் தங்கள் போக்குவரத்துக்கு சாலை போக்குவரத்தை விட அதிவிரைவான ரயில்வே மற்றும் நீர்வழிப்போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர். கேரளாவில் தற்போது அதிகளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், அதிக ரயில்வே கிராசிங்குகள், பல வளைவுகளை கடக்க வேண்டியுள்ளது. திருவனந்தபுரம் – காசர்கோடு இடையிலான 532 கிலோமீட்டர் தொலைவை ரயிலில் செல்ல 12 மணிநேரம் தேவைப்படுகிறது.

சில்வர்லைன் புராஜெக்ட்டின் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய மாவட்டங்கள், நகரங்கள் உள்ளிட்டவைகளை அதிவேக ரயில்களின் மூலம் இணைக்க அதுவும் தங்களது பிரத்யேக ரயில் பாதைகளின் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சில்வர்லைன் புராஜெக்ட்டின் முக்கியத்துவம்

532 கி.மீ. தொலைவிலான இந்த ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.56,443 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் ரயில்களை 200 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என்பதால் 12 மணிநேரமாக உள்ள பயண நேரம் 4 மணிநேரங்களாக குறையும்.
திருவனந்தபுரம் – திருச்சூர் வழித்தடத்திலிருந்து விலகி இப்பாதை அமைக்கப்பட்டாலும், திருச்சூர் – காசர்கோடு வழித்தடத்தில், தற்போதைய பாதைக்கு இணையாகவே அமைக்கப்படும். இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்கள், ஆலப்புழா, வயநாவு இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 14 மாவட்டங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். சர்வதேச விமானநிலையங்கள் அமைந்துள்ள கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளையும்இந்த ரயில் இணைக்கும். இந்த திட்டம், 2024ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவது யார்?

கேரளா ரயில் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் ( K-Rail) மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் மற்றும் கேரள அரசு இணைந்து நிதி பங்கீடு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நிதியுதவியை, தனியாரிடமிருந்தும் பெற அரசு திட்டமிட்டுள்ளது. K-Rail நிறுவனம். நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த திட்டம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், குறைந்தது 50 ஆயிரம் பேருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும். திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் 11 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழில் : டி.கே.குமரன் பாபு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close