எச்சரிக்கை மணியா இது? அமெரிக்க விசாவுக்கு ரூ.12 லட்சம் பிணைத் தொகை- இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

விசா பிணைத் தொகையைச் செலுத்தியவர்கள், அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புறப்பட்டால் அல்லது விசா காலாவதியாவதற்குள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யாமல் இருந்தால், செலுத்தப்பட்ட முழு பிணைத் தொகையும் தானாகவே திருப்பி அளிக்கப்படும்.

விசா பிணைத் தொகையைச் செலுத்தியவர்கள், அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புறப்பட்டால் அல்லது விசா காலாவதியாவதற்குள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யாமல் இருந்தால், செலுத்தப்பட்ட முழு பிணைத் தொகையும் தானாகவே திருப்பி அளிக்கப்படும்.

author-image
abhisudha
New Update
US Visa Bond Pilot Program

US Visa Bond Pilot Program

அமெரிக்காவிற்குச் சுற்றுலா அல்லது தொழில் நிமித்தம் செல்லத் திட்டமிடும் இந்தியப் பயணிகள் ஒரு முக்கியமான செய்தியை அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அரசு ஒரு புதிய 'விசா பிணைத் தொகை முன்னோடித் திட்டத்தை' (Visa Bond Pilot Program) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, விசா காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்கும் (Overstay) விகிதம் அதிகமாக உள்ள நாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முன் $15,000 (இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம்) வரை பிணைத் தொகையாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

Advertisment

விசா பிணைத் தொகை என்றால் என்ன?

அமெரிக்க வெளியுறவுத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 12 மாத முன்னோடித் திட்டம், ஆகஸ்ட் 20, 2025 முதல் ஆகஸ்ட் 5, 2026 வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், தற்காலிகப் பயணிகளாக (B-1/B-2 விசா) வருபவர்கள், விசா நேர்காணலின்போது, தூதரக அதிகாரியின் முடிவைப் பொறுத்து $5,000, $10,000 அல்லது $15,000 என ஏதேனும் ஒரு தொகையை பிணையாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தத் திட்டம் தற்போது, விசா காலம் முடிந்த பின்பும் அதிக நாட்கள் தங்கும் விகிதம் அதிகமாக உள்ள மலாவி, ஜாம்பியா மற்றும் சமீபத்தில் இணைக்கப்பட்ட காம்பியா ஆகிய மூன்று நாடுகளின் குடிமக்களுக்குப் பொருந்தும்.

இந்தியப் பயணிகள் கவலைப்பட வேண்டுமா?

இது இந்தியப் பயணிகளுக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை என்றாலும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

குறைவான 'ஓவர்ஸ்டே' விகிதம்: 2023ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியப் பயணிகளின் விசா காலம் முடிந்த பின் தங்கும் விகிதம் (Overstay Rate) வெறும் 1.29% மட்டுமே. இது, புதிய திட்டத்தின் கீழ் பிணைத் தொகை விதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு (காம்பியாவுக்கு 38.79%). எனவே, இந்தியப் பயணிகளுக்கு இந்த பிணைத் தொகை விதிக்கப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

இந்தியாவுக்கு விலக்கு: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இருப்பினும், அமெரிக்க அரசு அவ்வப்போது இந்தக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருவதால், விசா விதிகள் குறித்து இந்தியப் பயணிகள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

பிணைத் தொகை எப்போது திரும்பக் கிடைக்கும்?

விசா பெற்றவர் விசா விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால், அதாவது, அனுமதிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே அமெரிக்காவை விட்டு வெளியேறினால், அல்லது விசா காலாவதியாகும் முன் அமெரிக்காவிற்குள் நுழையாவிட்டால், செலுத்தப்பட்ட பிணைத் தொகை முழுவதுமாகத் திரும்பக் கிடைக்கும்.

ஆனால், விசா முடிந்த பின்பும் நாட்டில் தங்குவது அல்லது வேறு குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது போன்ற விதிமுறை மீறல்கள் நடந்தால், செலுத்தப்பட்ட பிணைத் தொகையை இழக்க நேரிடும்.

அமெரிக்கப் பயணத்தை உறுதியுடன் திட்டமிடும் இந்தியர்கள், தங்கள் விசா விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சரியான நேரத்தில் வெளியேறுவதன் மூலம், இது போன்ற கட்டுப்பாடுகளில் இருந்து விலகி நிம்மதியாகப் பயணிக்கலாம்!

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Visa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: