Advertisment

7.6 சதவீதம் வட்டி, 400 நாள்கள் காலக்கெடு: எஸ்.பி.ஐ,யின் இந்தப் எஃப்.டி தெரியுமா?

நடப்பாண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் வரும் 15ஆம் (ஆகஸ்ட்) தேதியோடு நிறைவு பெறுகிறது.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

புதிய வட்டி விகிதத்தை ஆக்ஸிஸ் வங்கி ஆக.14ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் கலாஷ் என்ற புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டம் 400 நாள்களில் முதிர்ச்சி அடையும். இத்திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டியும், சாதாரண மக்களுக்கு 7.1 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

Advertisment

நடப்பாண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் வரும் 15ஆம் (ஆகஸ்ட்) தேதியோடு நிறைவு பெறுகிறது. இத்திட்டத்தில் வட்டியை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுவாக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

ஐடிபிஐ அம்ரித் மஹோத்ஸவ் எஃப்.டி

ஐடிபிஐ வங்கி 375 மற்றும் 444 நாள்கள் என 2 சிறப்பு மஹோத்ஸவ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டங்களும் ஆக.15ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

இத்திட்டங்களில் முறையே சாதாரண மக்களுக்கு 7.15 சதவீதம் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment