Advertisment

சில்லறை வர்த்தகம் சார்ந்த வேலைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்... ஏன் தெரியுமா? ரீடெயில்ஜி நிறுவனர் விளக்கம்

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வேலைகளை அதிகம் விரும்புகிறார்கள்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Retail G Jobs

ரீடெயில்ஜி (RetailG) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.அருண்குமார்

இன்றைய காலக்கட்டத்தில் வேலையில்லா திண்டாடடம் அதிகமாக இருந்தாலும், பல இளைஞர்கள் சில்லறை வர்த்தகம் (Retail) தொடர்பான வேலைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதாகவும், இதன் காரணமாக சில்லறை வர்த்தம் நடைபெறும் சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் போன்ற ஷாப்பிங் மால்களில் கடைகளின் விளம்பரத்தை விடவும், வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரமே அதிகமாக உள்ளது.

Advertisment

இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ரீடெயில்ஜி (RetailG) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.அருண்குமார் என்பரிடம் பேசினோம்.

சில்லறை வர்த்தகம் (Retail) துறை சார்ந்த வேலைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகளை நல்ல தேர்வுகளாக பார்ப்பதில்லை. அதே சமயம் அவர்கள் இதைப் பற்றி வித்தியாசமாக சிந்திக்க வேண்டியது அவசியம். எந்த தொழிலாக இருந்தாலும், நீங்கள் கடினமாக உழைத்தால் முன்னேறலாம். அதேபோல் தான் சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகள் உண்மையில் திருப்திகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

சில்லறை வர்த்தகம் (Retail) தொடர்பான வேலைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை அல்லது மிக முக்கியமானவை அல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனாலும், முயற்சி செய்து உறுதியுடன் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். சில்லறை விற்பனையில், பொருட்களை விற்பதைத் தாண்டி பல்வேறு வேலைகள் உள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்களை அடுக்கி வைப்பது, கேஷியர், அல்லது கடைகளை நிர்வகிப்பது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.

Retail G Jobs

அதேபோல் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது அவர்களுக்கு உதவி செய்வது மற்றும் பொருட்களை விற்பதில் நீங்கள் சிறந்தவராக இருந்தால், இந்த வேலையில் நீங்கள் சிறப்பாக முன்னேற முடியும். மேலும், சில்லறை வணிகத்தில் பணிபுரிவது மற்ற வேலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும் பல திறன்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம். மக்களுடன் பேசுவது, குழுக்களில் பணிபுரிவது மற்றும் நேரத்தை நிர்வகிப்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் சில்லறை வணிகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும், இவைகள் அனைத்தும் உங்களுக்கு உதவும்.

சில இளைஞர்கள் சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகளில் அடிமட்டத்தில் தொடங்கி முன்னேற விரும்புவதில்லை. மாறாக, கடினமாக உழைக்காமல் தங்கள் வாழ்க்கையில் விரைவாக வெற்றிபெற விரும்புகிறார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் தங்களை முதலில் நிரூபிக்காமல் பதவி உயர்வுகளை எதிர்பார்த்தால், பின்னால் அது கிடைக்காமல் போகும்போது பெரிய வருத்ததத்திற்கு வழி வகுக்கும். ஆனால் சில்லறை வணிகத்தில், எல்லா வேலைகளை போலவே கடினமாக உழைத்தால், காலப்போக்கில் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் முன்னேற முயற்சியும் பொறுமையும் தேவை என்பதை இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாக சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகளை பல இளைஞர்கள் விரும்பாததற்கு முக்கிய காரணம், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் மற்றும் கடையில் இருக்க வேண்டும் என்பது தான். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வேலைகளை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகள் ஒரு தொழிலில் வளருவதற்கும் புதிய திறன்களை கற்றுக்கொடுக்கும். எனவே, இளைஞர்கள் இதைப் பற்றி வித்தியாசமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.

Retail G Jobs

சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகள் என்பது பொருட்களை விற்பது மட்டுமல்ல. மற்றவர்களுடன் நன்றாகத் தொடர்புகொள்வது மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும், இந்த வேலைகளில், அடிப்படை பணிகளில் தொடங்கி நிர்வாக நிலைகளுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, சில்லறை வணிகத்தில் பணிபுரிவது இளைஞர்கள் தொழிலைக் கற்றுக் கொள்ளவும் அதே தொழிலில் வளரவும் ஒரு சிறந்த வழியாகும்.

பல இளைஞர்கள் சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகள் முக்கியம் என்று நினைக்க மாட்டார்கள், ஆனால் இந்த வேலைகள் உண்மையில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் கடினமாக உழைத்து உறுதியுடன் இருந்தால் இந்த வேலைகள் திருப்திகரமான தொழிலுக்கு வழிவகுக்கும். சில்லறை வணிகம் தொடர்பான வேலை என்பது பொருட்களை அடுக்கி வைப்பது, விற்பது, கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல் இதை விட அதிகமாக பல உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு உதவுதல், பொருட்கள் கொள்முதல் செய்வதை நிர்வகித்தல் மற்றும் விற்பனை உத்திகளைப் பற்றி அறிந்துகொள்வது போன்ற பணிகள் உங்களுக்கு புதிய யோசனைகளை கற்றுக்கொடுக்கும்.

இந்த வேலைகளைச் செய்வதன் மூலமும், இதில் இருந்து வளர்த்துக்கொள்ளும் திறன்களை நீங்கள் பல வேலைகளுக்கு பயன்படுத்தலாம். ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்துடன் சில்லறை விற்பனையும் மாறுகிறது. இதன் பொருள் ஆன்லைன் விற்பனை, விளம்பரம் மற்றும் தரவுகளைப் பற்றி புரிந்துகொள்வது போன்ற துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் கற்றுக் கொள்ளவும், கடினமாக உழைக்கவும் தயாராக இருந்தால், சில்லறை வணிகத்தில் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க பல வழிகள் உள்ளன.

Retail G Jobs

நீங்கள் ஒரு பெரிய கடைக்குச் செல்ல விரும்பினாலும் அல்லது நீங்கள் சொந்தமாக சிறு வியாபாரத்தை தொடங்க விரும்பினாலும், இந்த வேலை மூலமாக வளர்த்துக்கொள்ளும் திறன்களை வைத்து  சிறப்பாக செயல்படலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சில்லறை வர்த்தகம் தொடர்பான வேலைகளை குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் அதற்காக உழைக்கத் தயாராக இருந்தால் அவை உங்களை சிறந்த இடத்திற்கோ அல்லது நீங்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிக்கு முக்கிய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இன்றைய பல வெற்றிகரமான சில்லரை வணிக உரிமையாளர்கள், அவர்களது இளம் வயதில் சில்லறை விற்பனைக் கடைகளில் வேலை செய்யத் தொடங்கியவர்கள் தான் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இத்துறை சார்ந்த வேலைகள் முக்கியமல்ல என்று நினைத்தாலும், அவை உண்மையில் எதிர்கால தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த தொடக்க புள்ளியாக இருக்கும் என்பதே உண்மை என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment