10th Revision Test: சமூக அறிவியல், ஆங்கில வினாத்தாள்களும் லீக்!

இந்த தகவலை பகிரும் கல்வி ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பள்ளிக் கல்வித் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

10th Revision Test: சமூக அறிவியல், ஆங்கில வினாத்தாள்களும் லீக்!

பொதுத்தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு 9ஆம் தேதி முதல் 15 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது.

இதேபோல் 12 ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி தொடங்கி 16 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதியும் முடிகிறது

அந்த வகையில், நாளை 10 ஆம் வகுப்புக்கு அறிவியில் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 12 ஆம் வகுப்பிற்கு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் நடைபெறவுள்ளது.

இந்த சூழ்நிலையில, இரண்டு தேர்வுக்கான வினாத்தாளும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத்தில் லீக் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, திருவண்ணாமலை பள்ளிகளில் ஏதெனும் ஒன்றில்,10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு லீக் ஆனதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வு நடைபெற்றாலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பிரிண்ட் செய்யப்படுவதால், லீக் ஆகும் சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் வினாத்தாள்கள் பரவி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 10-ம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு கேள்வித்தாளும் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே ஆங்கில பாட கேள்வித்தாளும் லீக் ஆன நிலையில் தற்போது சமூக அறிவியல் கேள்விதாளும் லீக் ஆகியுள்ளது.

இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: 10 12th standard revision exam question papers leaked online

Exit mobile version