கோயம்புத்தூர், மதுரை மற்றும் தஞ்சாவூர் போன்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக தேவை உள்ள 24 இடங்கள் 2021 மாணவர் சேர்க்கைக்கு வீணாக உள்ளது. நான்கு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகு, இந்த இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. மேலும், சுயநிதிக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் நான்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 14 மேலாண்மை இடங்களும் இன்னும் காலியாகவே உள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கைக்கான காலக்கெடு, மாநில தேர்வுக் குழுவின் படி, ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் அதன் இணையப் பக்கங்களில் சேர்க்கைக்கான கடைசி தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கடைசி தேதி முடிந்துவிட்டதாக மாநிலங்களுக்கு தெரிவித்துள்ளது. “பொது அறிவிப்பு அல்லது கடிதம் எதுவும் இல்லாததால், சேர்க்கைக்கான கடைசி தேதி குறித்து விசாரிக்க நாங்கள் அவர்களை அழைத்தோம். சேர்க்கைக்கான காலக்கெடு ஏப்ரல் 11 என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்,” என்று தேர்வுக் குழு செயலாளர் பி வசந்தமணி கூறினார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 812 இடங்களை, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விட்டுக்கொடுத்தது. இது 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% ஆகும். இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் புதுதில்லியில் உள்ள ஹெல்த் சர்வீசஸ் பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள குழுவால் செய்யப்படுகிறது.
இரண்டு சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகு இடங்கள் பொதுவாக மாநிலங்களுக்குத் திரும்பும் போது, மத்திய குழு இந்த முறை மாப்-அப் மற்றும் ஸ்ட்ரே சுற்று (mop-up and a stray round) நடத்தியது.
செவ்வாயன்று, 24 மாணவர்கள் கவுன்சிலிங்கில் சேரவில்லை என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த முறை மாநில கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்பட்டது, ஆனால் தகவல் தொடர்பு சிக்கல்களால் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன” என்று வசந்தமணி கூறினார்.
திங்கள்கிழமை, சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 18 இடங்களுக்கு மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை ஸ்ட்ரே சுற்று கவுன்சிலிங் நடைபெற்றது.
“ஏப்ரல் 6 ஆம் தேதி மட்டுமே, ஒரு தனியார் கல்லூரிக்கு 50 கூடுதல் இடங்களை என்எம்சி அனுமதித்ததால், காலியாக உள்ள இடங்களை கல்லூரிகளுக்கு வழங்க முடியவில்லை. அவற்றை முழுவதுமாக கல்லூரிகளுக்குக் கொடுப்பதற்கு முன், நாங்கள் குறைந்தபட்சம் ஒரு மாப்-அப் சுற்று நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எம்சிசி-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ட்ரே கவுன்சிலிங் சுற்றில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பல விண்ணப்பதாரர்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.
முதல் முறையாக ஆன்லைன் கவுன்சிலிங் செய்த மாநில தேர்வுக் குழுவும் கடுமையாக இல்லை. “மாப்-அப் சுற்றில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சேராத விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில தேர்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அபராதம் விதிக்கப்படும் என அரசு மிரட்டியிருந்தால், இடங்கள் காலியாக இருந்திருக்காது,” என மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார்.”உண்மையில், அத்தகைய விண்ணப்பதாரர்கள் எந்த மருத்துவக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகளுக்கு சேர தடை விதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “