Advertisment

5 ஆண்டுகளில் 33 ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலை; மத்திய அரசு

மொத்தத்தில், ஐ.ஐ.டி.,கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.,கள்) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.,கள்) கடந்த 5 ஆண்டுகளில் 61 தற்கொலை வழக்குகளை பதிவு செய்துள்ளன

author-image
WebDesk
New Update
5 ஆண்டுகளில் 33 ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலை; மத்திய அரசு

கடந்த மாதம், ஐ.ஐ.டி பம்பாயில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

ராஜ்யசபாவில் புதன்கிழமை கல்வி அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2018 முதல் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) முப்பத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Advertisment

மொத்தத்தில், ஐ.ஐ.டி.,கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.,கள்) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்.,கள்) இந்த காலகட்டத்தில் 61 தற்கொலை வழக்குகளை பதிவு செய்துள்ளன. தற்கொலைகளில் பாதிக்கும் மேலானவை ஐ.ஐ.டி.,களில் நிகழ்ந்துள்ளன, அதைத் தொடர்ந்து என்.ஐ.டி.,கள் (24) மற்றும் ஐ.ஐ.எம்.,கள் (4) உள்ளன.

இதையும் படியுங்கள்: JEE Mains 2023; ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு; மார்ச் 16 கடைசி தேதி

2018-2023 காலகட்டத்தை உள்ளடக்கிய தரவு, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி எல்.ஹனுமந்தையாவின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பகிரப்பட்டது.

“கல்வி மன அழுத்தம், குடும்பக் காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், மனநலப் பிரச்சினைகள் போன்றவை இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகளுக்கு சில காரணங்கள்” என்று கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.டெக் மாணவர் தற்கொலை செய்து கொண்டதை அரசாங்க தரவு கணக்கில் எடுத்துக் கொண்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த மாதம், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி அறிஞரும் ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார், அதே நேரத்தில் ஐ.ஐ.டி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதல் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைகளின் தொடர் நிகழ்வுகள் மாணவர்களின் மனநல நிலை மற்றும் முதன்மை கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. டிசம்பர் 2021 இல், மத்திய அரசின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 122 மாணவர்கள் 2014 மற்றும் 2021 க்கு இடையில் தற்கொலை செய்துகொண்டதாக மக்களவையில் அரசாங்கம் தெரிவித்தது.

122 மாணவர்களில், 24 பேர் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் எஸ்.டி மற்றும் 41 பேர் ஓ.பி.சி.

மாணவர்களின் தற்கொலைக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, அரசாங்கம் புதன்கிழமை மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இல் “நிறுவனங்களில் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி ரீதியான சரிசெய்தல் ஆகியவற்றைக் கையாள்வதற்கான ஆலோசனை அமைப்புகள் உள்ளன,” என்று தெரிவித்தது.

மேலும், “கல்வி அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மாணவர்களுக்கான சக மாணவர்கள் உதவி மூலம் கற்றல், பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. மனோதர்பன் என்று பெயரிடப்பட்ட இந்திய அரசின் முன்முயற்சி, கோவிட்-19 வெடித்த காலத்திலும் அதற்கு அப்பாலும் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்கான பரந்த அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கியது,” என்றும் பதிலில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment