அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு – அமைச்சரவைக் குழு அமைப்பு

'எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்' பட்டியலில் அண்ணா  பல்கலைக்கழகம் சேர்ந்தால், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தனி உயர்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டத் தொடங்கும்.

By: Updated: December 18, 2019, 12:40:13 PM

For Anna University Bifurication Tamilnadu government forms minsiters panel: இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தை ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. ‘எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்’ பட்டியலில் அண்ணா  பல்கலைக்கழகம் சேர்ந்தால், அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தனி உயர்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டத் தொடங்கும்.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

தற்போது வரையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500 மேற்பட்ட பொறியியல் கல்லுரிகள் இணைக்கப்பட்டுள்ளன (colleges affiliated to annauniversity).

அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா எமினென்ஸ் இன்ஸ்டிடியூட், தனியார் பொறியியல் கல்லூரிகளை இணைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்கவும், அண்ணா பல்கலைக்கழகம் சட்டம், 1978  திருத்தம் செய்யவும் ஏற்ற பரிந்துரைகளை அளிக்க தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவில் கல்வி ஆய்வாளர்களோ, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான அரசு உத்தரவில்,

பள்ளிக் கல்வித துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

மின்சாரம், தடை மற்றும் கலால் துறை அமைச்சர் பி.தங்கமணி,

சட்ட, நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை  அமைச்சர் சி.வி. சண்முகம்,

மீன்வள மற்றும் பணியாளர்/ நிருவாகச் சீர்திருத்த துறை அமைச்சர்  டி.ஜெயக்குமார்,

உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன்

போன்றோர் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான  பரிந்துரையளிக்கும் குழுவில் உறுபபினர்களாக உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, இது குறித்து கூறுகையில் “ஒரு குழுவை அமைப்பது அரசாங்கத்திற்கே உரிய அதிகாரமாகும் . இருப்பினும், கடந்த காலங்களில், சென்னை பல்கலைக்கழக நான்கு வளாகங்களை ஒன்றிணைக்கும் போது சரியான திட்டமிடல் இல்லாமல் போனது. மேலும், இந்த குழு அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் காலத்தில் கொடுக்கபட்ட பரிந்துறைகளயும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Anna university bifurication tamilnadu government forms minsiters panel anna university ioe tag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement