Army Recruitment Rally From 15 April to 25 : திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மைதனாத்தில் ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியின் புதுச்சேரி மாவட்டம் மற்றும் கடலூர், வேலூர், திருப்பதுர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய தமிழகத்தின் பதினொரு மாவட்டங்களில் வாழும் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
சிப்பாய் டெக்னிகல், சிப்பாய் நர்சிங் உதவியாளர் / சிப்பாய் கால்நடை நர்சிங் உதவியாளர், சிப்பாய் எழுத்தர் , சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் போன்ற பணிகளுக்கு தேர்வர்கள் தேர்தேடுக்கப்படுகிறார்கள்.
ஆன்லைன் விண்ணப்பம்:
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதிக்குள் joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் தேர்வர்கள் விண்ணபிக்கலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு எந்நேரத்திலும் அட்மிட் கார்டு வெளியிடப்படும்.
தேர்வர்கள், ஆள் சேர்ப்பு முகாமிற்கு வரும் பொழுது தங்களது விண்ணப்பம், அட்மிட் கார்டு,மற்றும் அட்மிட் வார்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள. தேதி மற்றும் நேரம் அட்மிட் கார்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் .
தகுதி நிபந்தனைகள்:
வயது வரம்பு:
வின்னப்பம் செய்வது எப்படி:
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"