கோவை சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் தென்கொரியாவில் உள்ள ஹேண்டாங் குளோபல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கல்லூரியில் பயிலும் போது மாணவ மாணவிகளின் திறன்களை வளர்க்கும் விதமாக சர்வதேச அளவிலான பல்கலைகழகங்களுடன் கல்லூரிகள் ஒப்பந்தங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் கல்வி பரிமாற்றத்தை வலியுறுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தென்கொரியவில் உள்ள ஹேண்டாங் குளோபல் பல்கலைக்கழகம் சென்று பயிற்சி பெறும் விதமாகவும், அங்குள்ள மாணவர்கள் கோவை வந்து பயிற்சி பெறும் விதமாகவும் பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் தென்கொரிய பல்கலைக்கழகம் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சி.எஸ்.ஐ கோவை திருமண்டல பேராயரும், பிஷப் அப்பாசாமி கல்லூரி தலைவருமான திமோத்தி ரவீந்தர் மற்றும் ஹேண்டாங் குளோபல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாத அலுவலர் சுங்மின் கிம் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த நிகழ்ச்சியில் பிஷப் அப்பாசாமி கல்லூரி செயலர் பிரின்ஸ் கெல்வின், துணை தலைவர் டேவிட் பர்னபாஸ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை