/indian-express-tamil/media/media_files/xOVz8tIFkZIyFALHl9RK.jpg)
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1121 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Head Constable
காலியிடங்களின் எண்ணிக்கை: 1121
Radio Operator – 910
Radio Mechanic – 211
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, Radio and Television or General Electronics or Computer Operator and Programming Assistant or Data Preparation and Computer Software or Electrician or Fitter or Information Technology and Electronics System Maintenance or Communication Equipment Maintenance or Computer Hardware or Network Technician or Mechatronics or Data Entry Operator ஆகிய பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,500 - 81,100
வயது வரம்பு தளர்வு: எஸ்.சி/ எஸ்.டி (SC/ ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு, கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. ஆனால் பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.