BSNL Jobs: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை; 120 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸிக்யூடிவ் வேலை வாய்ப்பு; 120 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; முழு விபரம் இங்கே

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸிக்யூடிவ் வேலை வாய்ப்பு; 120 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; முழு விபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
bsnl

பி.எஸ்.என்.எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லது சி.ஏ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 120 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

சீனியர் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி (Senior Executive Trainee)

காலியிடங்களின் எண்ணிக்கை – 120

Telecom

காலியிடங்களின் எண்ணிக்கை – 95

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electronics and Telecommunications/ Electronics/ Computer Science/ Information Technology/ Electrical/ Instrumentation பிரிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். 

Finance

காலியிடங்களின் எண்ணிக்கை – 25

கல்வித் தகுதி: Chartered Account/ Cost & Management Accountancy படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 24,900 – 50,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிவிப்பு வெளியான பின்னர், மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு இந்த இணையதளப் பக்கத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்.

jo

Bsnl Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: