Advertisment

பி.டெக் மாணவர் சேர்க்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு..காரணம் என்ன? - அரசு ஆய்வு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பி.டெக் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. யுஜி படிப்பில் பி.டெக் மட்டுமே குறைந்த அளவிலான மாணவர் சேர்க்கை பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
பி.டெக் மாணவர் சேர்க்கை 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு..காரணம் என்ன? - அரசு ஆய்வு

AISHE 1,084 பல்கலைக்கழகங்கள், 40,176 கல்லூரிகள் மற்றும் 8,696 தனி நிறுவனங்களில் ஆய்வு

நாடு முழுவதும் இளங்கலை அளவில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பொறியியல் படிப்பு மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத சரிவை பதிவு செய்துள்ளது என்று கல்வித் துறை அமைச்சம் வெளியிட்ட அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE)அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

AISHE 2020-21-இன் ஆய்வின் படி, முழுநேர பி.டெக் மற்றும் பி.இ படிப்புகளில் மாணவர் சேர்க்கை 2016-17 இல் 40.85 லட்சத்தில் இருந்து 2020-21 இல் 36.63 லட்சமாக 10% குறைந்துள்ளது. 2019-20 மற்றும் 2020-21 கல்வியாண்டுகளுக்கு இடையே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை எண்ணிக்கையில் 20,000 எண்ணிக்கையில் ஓரளவு அதிகரிப்பு இருப்பதாக தரவு காட்டினாலும், முழுமையான சேர்க்கை எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பொறியியல் இளங்கலைப் படிப்புகள் மூன்றாவது அதிக மாணவர் சேர்க்கையைக் கொண்டிருந்தன, பி.ஏ மற்றும் பி.எஸ்.சி முறையே 1-வது மற்றும் இரண்டாவது இடத்தில் இருந்தன. கடந்த ஐந்தாண்டுகளில் சேர்க்கை குறைந்துள்ளதால், பி.டெக் மற்றும் பி.இ படிப்புகள் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இப்போது இளங்கலை வணிகம் B.Com (37.9 லட்சம் மாணவர்களுடன்) நாட்டிலேயே மூன்றாவது அதிகப் பதிவு எண்களைக் கொண்டுள்ளது.

விகிதாச்சாரத்தின் அடிப்படையில், 2020-21 ஆம் ஆண்டில், இளங்கலை மட்டத்தில் மொத்த சேர்க்கையில் 33.5% பி.ஏ படிப்பு கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து அறிவியல் அல்லது BSc 15.5% ஆகும், அதைத் தொடர்ந்து வணிகம் 13.9 ஆக உள்ளது. பங்கு மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் 11.9% ஆக உள்ளது.

அதேபோல் எம்.டெக் (மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி) படிப்பில் 2016-17-ம் ஆண்டில் 1.6 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2020-21-ம் ஆண்டில் 1.38 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கிடையில், பிற முக்கிய இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. BA, BSc மற்றும் BCom போன்ற படிப்புகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கையில் பெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளன. BA 2016-17-இல் 80 லட்சத்தில் இருந்து 2020-21 இல் 85 லட்சமாகவும், BSc 44 லட்சத்தில் இருந்து 47 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2016-ல் 34 லட்சத்தில் இருந்து 2020-ல் 37 லட்சமாக அதிகரித்தது.

தற்போது பி.டெக் படிப்பில் 23.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் அதில் 28.7% பெண்கள் என்றும் தரவு காட்டுகிறது. பி.இ படிப்பில் மொத்தம் 13.42 லட்சம் மாணவர்களில் 28.5% பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது. கணினி பொறியியல் மாணவர்களிடையே மிகவும் பிரபலமான பாடப்பிரிவாக உள்ளது. அதைத் தொடர்ந்து இயந்திர பொறியியல், மின்னணு பொறியியல், சிவில் பொறியியல் மற்றும் மின் பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 2017-ம் ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஆய்வில் 2016-17 காலாண்டில் 3,291 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 15.5 லட்சம் இளங்கலை இடங்களில் 51% இடங்கள் நிரம்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

விசாரணையில் ஊழல் குற்றச்சாட்டு உள்பட ஒழுங்குமுறையில் வெளிப்படையான இடைவெளிகளைக் கண்டறிந்தது. மேலும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டறிந்தது. தொடர்ந்து வகுப்பறையை வளர்ப்பதற்கான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு இல்லாதது என அனைத்தும் மாணவர்கள் வேலைவாய்ப்பின்மைக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது.

AISHE 1,084 பல்கலைக்கழகங்கள், 40,176 கல்லூரிகள் மற்றும் 8,696 தனி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 1,113 பல்கலைக்கழகங்கள், 43,796 கல்லூரிகள் மற்றும் 11,295 தனி நிறுவனங்கள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment