சென்னை சுகாதாரத்துறையில் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai Health Dept invites application for various posts: சென்னை சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட சுகாதாரச் சங்கம், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணக்காய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 89 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.11.2021க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 45,000

மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி : MBA/ PG Diploma in Health Administration படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,000

மாவட்ட DRTB /HIV TB ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : இளங்கலை அறிவியல் படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,000

மாவட்ட  PPM ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி : MSW/ M.Sc உளவியல் படித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 19,000

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் சுகாதாரத்துறையில் 1 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி : : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வித் தகுதி : : B.Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 58

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆய்வக நுட்புனர் (DMLT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

TB சுகாதாரப் பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுகாதாரத்துறையில் 1 வருட பணி அனுபவம் அவசியம்.

கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

ஆற்றுப்படுத்துனர் DRTB மையம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வித் தகுதி : இளநிலைப் பட்டம் (சமூகவியல், சமூகப் பணி, உளவியல்) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

கணக்காய்வாளர் (Accountant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி : இளங்கலை வணிகவியல் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி :

திட்ட அலுவலர், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை – 600012

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai health dept invites application for various posts

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com