/indian-express-tamil/media/media_files/cSQdpDmoaZjjeatvGDNv.jpg)
சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித பொது உரிமைகள் நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வளம் ஆகிய படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 28,000
மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: சமூகப்பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 21,000
ஆற்றுப்படுத்துநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ உளவியல்/ பொது சுகாதாரம் ஆகிய படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/applications-are-invited-for-contractual-positions-at-the-child-help-center-and-railway-kiosk-in-chennai-district/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண் – 1, புதுத்தெரு, வணிக வளாகம், GCC முதல் மாடி, ஆலந்தூர், சென்னை - 600016
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.