Cognizant front line in foreign company in Employment: இந்தியாவில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், காக்னிசன்ட், அக்செஞ்சர் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்தியாவில் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவில் அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் வெளியாகி உள்ளன. அதே போல, ஆட்டோ மொபைல் வாகன உற்பத்தி துறையும் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளன. டி.வி.எஸ். அசோக் லேலேண்ட் நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு 16 நாட்கள் வரை விடுமுறை அளித்தது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியும் குறைந்தது. இப்படி பல பிரச்னைகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகளை சரி செய்ய மத்திய அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி வகிதத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் காக்னிசன்ட், அக்செஞ்சர் நிறுவனங்கள் முன்னிலையில் உள்ள செய்தி வெளியாகி உள்ளது. காக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில்ம் மட்டும் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை அளிக்கும் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்து உள்ளது. கக்னிசண்ட் நிறுவனத்தில் உலகம் முழுக்க சுமார் 2.9 லட்சம் பேர் பணி புரிகின்றனர். அதில் அந்த நிறுவனம் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் இருப்பவர்களுக்கு அளித்து வருகிறது.
இந்தியாவில் காக்னிசன்ட் நிறுவனம் 2 லட்சம் பேருக்கு மேல் வேலை அளித்திருப்பதை காக்னிசன்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் பிரையன் ஹம்ஃப்ரைஸ் உறுதி செய்துள்ளார். அதோடு, காகினிசன்ட் நிறுவனம் இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில், முன்னிலையில் உள்ளது.
அதே போல, அக்செஞ்சர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அளித்து வருகிறது. ஐபிஎம் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1.2 லட்சம் பேருக்கு வேலை அளித்து வருகிறது. கேப் ஜெமினி ஐடி நிறுவனம் இந்தியாவில் 1.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
காக்னிசண்ட் போல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுக்க 4 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலான வேலை வாய்ப்புகளை இந்தியாவில் இருப்பவர்களுக்கு அளித்து வருகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் உலகம் முழுக்க 2.3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. அதில் சுமார் 1.9 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியாவில் அளித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.