7267 ஆசிரியர்கள் தேவை; மத்திய அரசுப் பணி; தமிழ்நாட்டிலும் வாய்ப்பு; விண்ணப்பிக்க தயாரா?

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 7267 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 7267 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
teacher

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் 400 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 7267 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும்.

Advertisment

பள்ளி முதல்வர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 225

கல்வித் தகுதி: Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 78,800 - 2,09,200

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1460

English - 112 

Hindi - 81 

Maths - 134 

Chemistry - 169 

Physics - 198 

Biology - 99 

History - 140 

Geography - 98 

Commerce - 120 

Economics - 155 

Computer - 154

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 47,600 - 1,51,100

பட்டதாரி ஆசிரியர்கள் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3962

Hindi - 424 

English - 395 

Maths - 381 

Social Studies - 392 

Science - 408 

Computer Science - 550 

Assamese – 8

Bodo - 2 

Bengali - 8 

Garo - 1 

Gujrati - 2 

Kannada - 6 

Khasi - 3 

Malayalam - 2 

Manipuri - 11 

Mizo - 6 

Odiya - 57 

Santhali - 71 

Telugu - 44 

Urdu - 2 

Music - 314 

Art - 279 

PET (Male) - 173 

PET (Female) - 299 

Librarian – 124

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் Bachelor Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 44,900 – 1,42,400 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ. 35,400 – 1,12,400

பெண் செவிலியர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 550

கல்வித் தகுதி: B.Sc. Nursing படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200 – 92,300

விடுதி காப்பாளர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 635

கல்வித் தகுதி: Bachelor's Degree படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 29,200 – 92,300

கணக்காளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 61

கல்வித் தகுதி: Degree of Commerce படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400

இளநிலை செயலக உதவியாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 228

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900 – 63,200

ஆய்வக உதவியாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 146

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/recSys2025/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFZ5JDNNIP7I8JbNwGOl976uPeIvr9X7G7iVESmo7y1L6 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025

விண்ணப்பக் கட்டணம்: முதல்வர் – ரூ. 2000, ஆசிரியர் – ரூ. 1500. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – ரூ. 1000

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Teacher Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: