ஜே.இ.இ மட்டுமல்ல… இன்ஜினியரிங் படிக்க இவ்வளவு நுழைவுத் தேர்வுகள் இருக்கு; முழு விபரம் இங்கே

ஜே.இ.இ முதல் க்யூட் தேர்வு வரை… பொறியியல் படிக்க நாடு முழுவதும் உள்ள நுழைவுத் தேர்வுகள் எவை? அவற்றிற்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே

ஜே.இ.இ முதல் க்யூட் தேர்வு வரை… பொறியியல் படிக்க நாடு முழுவதும் உள்ள நுழைவுத் தேர்வுகள் எவை? அவற்றிற்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
jee main exam

12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இருக்கும் பெரும் கேள்வி. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், பொருளாதாரம் போன்ற பல்வேறு விருப்பங்களில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். 

Advertisment

சமீபகாலமாக வேலை வாய்ப்பு மற்றும் சிறந்த சம்பளத்தொகுப்பு காரணமாக பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் முன்னெப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது. தமிழக மாணவர்களை பொறுத்தவரை பொறியியல் படிக்க வேண்டும் என்றால், அவர்களிடம் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நுழைவுத் தேர்வு இல்லாத அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை. இங்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மற்றொன்று ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு வழி.

பொறியியல் நுழைவுத் தேர்வு என்றாலே நம் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது ஜே.இ.இ தேர்வுகள் தான். ஆனால் அதனையும் தாண்டி இன்னும் பல பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல சிறப்புமிக்க தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. 

இந்தநிலையில், பொறியியல் படிக்க விரும்புபவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள நுழைவுத் தேர்வுகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதுகுறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, 

Advertisment
Advertisements

1). ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வு (JEE Mains)

ஜே.இ.இ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றால், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு எழுதலாம். மேலும் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி, சில தனியார் நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். அக்டோபர் மாதம் விண்ணப்பப் பதிவு தொடங்கி, ஜனவரியில் தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்டம் ஏப்ரலில் நடைபெறும்.

2). BITSAT

பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வு இது. விண்ணப்பப் பதிவு ஜனவரியில் தொடங்கும்.

3). VITEEE

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமானோர் எழுதும் தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் முடிந்து, ஏப்ரலில் தேர்வு நடைபெறும்.

4). AEEE

கோவையில் உள்ள அமிர்த விஷ்வ வித்யாபீடம் நிறுவனத்தில் படிக்க இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஜே.இ.இ அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பப் பதிவு ஜனவரியில் தொடங்கும்.

5). SRMJEE

தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிகமான மாணவர்களால் விரும்பப்படும் நுழைவுத் தேர்வு, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வாகும். விண்ணப்பப் பதிவு நவம்பரில் தொடங்கும்.

6). MET

கர்நாடகாவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், தமிழக மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பொறியியல் நிறுவனமாகும். விண்ணப்பப் பதிவு அக்டோபரில் தொடங்கும்.

7). AMITY JEE

உத்தரபிரதேசத்தில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு இது. விண்ணப்பப் பதிவு பிப்ரவரியில் தொடங்கும்.

8). SNUCEE

தமிழகத்தின் முதன்மை தனியார் பொறியியல் கல்லூரியாக இருந்த எஸ்.எஸ்.என் கல்லூரி, அதன் சொந்த பல்கலைக்கழகமான ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு தான் SNUCEE. விண்ணப்பப் பதிவு நவம்பரில் தொடங்கும்.

9). SNUSAT

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் டெல்லி வளாகத்திற்கான நுழைவுத் தேர்வு இது. இங்கு ஜே.இ.இ, க்யூட் தேர்வு அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பப் பதிவு டிசம்பரில் தொடங்கும். 

10). NDA – National Defence Academy

தேசிய பாதுகாப்பு நிறுவனம் நடத்தும் இந்த நுழைவுத் தேர்வு மூலமும் பொறியியல் படிக்கலாம். படிக்கும்போதே ஊக்கத்தொகை வழங்கப்படும். படித்த பின்னர் அரசு பணி வழங்கப்படும். விண்ணப்பப் பதிவு டிசம்பரில் தொடங்கும்.

11). IMU CET

கடல்சார் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் இந்த நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். விண்ணப்பப் பதிவு மார்ச் மாதம் தொடங்கும்.

12). IAT – IISER Aptitude Test

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான நுழைவுத் தேர்வு இது. ஆராய்ச்சி துறையை தேர்வு செய்பவர்களுக்கு பொருத்தமானது.

13). COMED – K

கர்நாடகாவில் படிக்க விரும்புபவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு இது. இந்த தேர்வு மூலம் பொறியியல் மட்டுமல்லாமல் மருத்துவ படிப்புகளையும் படிக்கலாம். விண்ணப்பப் பதிவு பிப்ரவரியில் தொடங்கும்.

14). WBJEE

மேற்கு வங்கத்தில் படிக்க விரும்புபவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு இது. விண்ணப்பப் பதிவு டிசம்பரில் தொடங்கும்.

15). CUET

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் சில பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம். விண்ணப்ப பதிவு பிப்ரவரியில் தொடங்கும்.

Jee Main Engineering

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: