படிக்கிறார்கள், பயன்படுத்துகிறோமா ? பெண் உயர்கல்வி பற்றிய ஷாக் சர்வே

உயர்க் கல்வியில் பெண்களின் எண்ணிகையை அதிகரித்ததோடு நின்றுவிடாமல், அந்தக் கல்வியை அவர்களுக்கே எப்படி பயன்படுத்துவதாய் மாற்றுவது ?

கடந்த ஆண்டுகளை விட இந்தியா உயர் கல்வியில் பெண்களின் எண்ணிக்கை அதிக வளர்ச்சியை உடையதாய் இருந்தாலும், சமூக அளவில் இதற்கான மாற்றங்கள் எற்பட்டுள்ளதா ? , சமூகம் இந்த வளர்ச்சியை எவ்வாறு பார்க்கின்றது? போன்ற கேள்விகளை இக்கட்டுரையில் காண்போம்.

இந்தியாவின் உயர்கல்வியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 37.4 மில்லியனாக உள்ளது.இதில், 48.6% பெண்களாக உள்ளனர். அதாவது, உயர் கல்வியில் படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை  18.2 மில்லியன் ஆகும்.

அதிலும், குறிப்பாக எம்.பில். முதுகலைப் படிப்புகளில் இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளன.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு, படிப்பெதற்கு என்று கேட்ட அதே இந்தியாவில் தான் இன்று இந்த சாதகனை நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து  கிராமப் புறங்களும் இந்த மாற்றங்களை காண்கிறது என்றே சொல்லலாம்  . உதாரணமாக, 2016-ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில்,  கிரமத்தில் இருக்கும் 18 வயதைக் கடந்த பெண்கள் 70% ஏதோ ஒரு கல்லூரியில் படுத்தவராய்/ படித்துக் கொண்டிருப்பவராய் உள்ளனர்.  உண்மையிலே, இது நல்ல செய்தி. ஏனெனில், பெண் கல்வியைப் பொறுத்தே ஒரு நாடு வாழும் அல்லது வீழும்.

இருந்தாலும், உயர் கல்வியடைந்த பெண்கள் எல்லாம் வேலைக்கு செல்கின்றனரா?  என்ற கேள்விக்கு நம்மிடம் மகிழ்ச்சியான பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சமிப்பத்தில், புகழ்பெற்ற அஜிம் பிரேம்ஜி பலகலைக்கழகம் நடத்திய ஆய்வில் சில தகவல்கள் நம்மை சற்று யோசிக்கவே வைக்கின்றன.

உதரணமாக, ஆண்களுக்கும்/ பெண்களுக்கும் கல்வி எவ்வாறு பயன்படும் என்ற கேள்விக்கு பெற்றோர்களின் கருத்து என்ன தெரியுமா?

திருமணம் மற்றும் வீட்டுக் கடமையைத் திறம்பட செய்ய பெண்களுக்கு கல்வி பயன்படும் என்று 53 சதவீத பெற்றோரகள் நினைக்கின்றனர், ஆனால், இதே கேள்விக்கு ஆண்களுக்கு 13  சதவீதம் என்பதே பதிலாய் வந்துள்ளது.

மேலும், சமூக அந்தஸ்த்துக்குத் தான் கல்வித் தேவைப்படுகிறது என்று 84% பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதில், ஆண்களுக்கும், பெண்களுக்கும்  ஒரே மதிப்பெண் வந்துள்ளது.

நல்ல,  வேலை வாய்ப்புக்காக பெண்களுக்கு கல்வித் தேவை என்று 52 சதவீத பெற்றோர்களே நினைக்கின்றனர். ஆண்களுக்கு 72 சதவீத மாகும்

இதிலிருந்து புரிந்துக் கொள்வது என்னவென்றால், சுதந்திரத்திற்க்காகவோ, தன்னிலையை அடைவதற்க்காகவோ அல்லாமல் அதே பழைய சமூக கட்டமைப்பில் இருந்து மீளமுடியாமல் இன்றைய பெண்களின் கதி உள்ளது. இது கெட்ட செய்தி. ஏனெனில், பெண்களின் வாழ்வுமுறைப்  பொறுத்தே ஒரு நாடு வாழும் அல்லது வீழும்.

இந்த படித்தப் பெண்கள் வேலைக்கு வரும் பொது சமூக கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும் . எனவே , உயர்க் கல்வியில் பெண்களின் எண்ணிகையை அதிகரித்ததோடு நின்றுவிடாமல், அந்தக் கல்வியை அவர்களுக்கே எப்படி பயன்படுத்துவதாய் மாற்றுவது ?  இதற்காக என்ன நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும், பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Higher eduacation gender parity achieved but female labor participation rate greatly reduced female enrolment in colleges

Next Story
போட்டித் தேர்வுகளில் வெற்றி: ஞாபகத்தை பெருக்க என்ன வழி?train your memory to improve your success - competitive exam preparation, how to improve our memory
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express