வங்கி எழுத்தர் தேர்வு முடிவுகள் இன்று ரிலீஸ்... எப்படி பார்ப்பது?

IBPS Clerk Prelims Result 2018 Expected to be Released Today: இந்த தேர்வு முடிவுகளை மாலை 5 மணி முதலே காண முடியும்.

IBPS Clerk Prelims Result 2018 Expected Today : தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பாங்கிங் பெர்சனல் செலெக்‌ஷன் (IBPS) தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 4, 2019) வெளியாகும் என அந்நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு தழுவிய அளவில் வங்கி எழுத்தர் பணிக்காக நடந்த தேர்வு ஆகும்.

கிளார்க் பதவிக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், ibps.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம். இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஐ.பி.பி.எஸ் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஐபிபிஎஸ் இணையதளத்தில், மாலை 5 மணிக்கு பிறகு தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.” என்றார்.

IBPS Clerk Prelims Result 2018 : ஐபிபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

டிசம்பர் இறுதி வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த தேர்வின் பிரிலிம்ஸ் தேர்வுகள் டிசம்பர் 8, 9, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்றது. இந்த பிரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள், ஜனவரி 20ம் தேதி நடைபெறும் முக்கிய தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

பின்னர் இறுதி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 7,275 இடங்களுக்காக தேர்ச்சிகள் நடத்தப்படும்.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

  1.  ibps.in இணையத்தை ஓபன் செய்யவும்
  2. “Click here to IBPS Clerk preliminary exam results 2018” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  3. புதிய பக்கம் ஓபன் ஆகும். அங்கு உங்களின் ரெஜிஸ்டர் நம்பர் டைப் செய்து, பாஸ்வர்டு போட்டு நுழையவும்.
  4. உங்களின் தேர்வு முடிவுகள் வரும்.

இந்த தேர்வு முடிவுகளை மாலை 5 மணி முதலே காண முடியும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close