'சர்வதேச கல்வி நிறுவனம்' என்கிற தன்னார்வ அமைப்பு, 'சர்வதேச கல்வி பரிமாற்றம் 2019' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இது, மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டை விடுத்து மற்ற நாடுகளில் தங்கி சென்று படிக்கும் சர்வேதச மாணவர்களைப் பற்றிய ஆய்வறிக்கையாகும். இதில், அமெரிக்கா நாட்டில் உயர்கல்வி படித்திக் கொண்டிருக்கும்/புதிதாய் படிக்கவரும் மாணவர்களைப் பற்றிய டேட்டாக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த ஆய்வறிக்கையில், சொல்லப்பட்டிருக்கும் சில முக்கிய தகவல்கள் இங்கே :
2018/19 ஆண்டில் மாட்டும் அமெரிக்கா நாட்டில் 1,095, 299 சர்வதேச மாணவர்கள் தங்கியுள்ளனர். இது கடந்த வருடத்தை விட 0.05% அதிகமாகும்.
எண்ணிக்கை கணக்கில் சீனா, இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.
இந்த, சர்வதேச மாணவர்களில் 369,548 பேர் சீனா நாட்டை சேர்ந்தவர்கள். 202,014 இந்திய மாணவர்கள் சர்வேதச மாணவர்களாக அமெரிக்கா நாட்டில் உள்ளனர்.
இந்திய மாணவர்களில் 80% அதிகாமான மாணவர்கள் STEM படிப்புகளுக்காக அமெரிக்கா செல்கின்றனர் :
இந்த சர்வேதேச மாணவர்கள் அமெரிக்கா பொருளாதாரத்தில் 44.7 பில்லியன் டாலரை பங்களிக்கின்றனர்.
பின்குறிப்பு :
அமெரிக்காவில் தேசியவாதம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சர்வேதச மாணவர்களை அதிகரித்திருப்பது எப்படி ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில், அதற்கான பதிலும் உள்ளது.
உதாரணமாக, 2019 ஆண்டில் சர்வதேச மாணவர்கள் முதல் முறையாக அமெரிக்கா உயர்கல்வி வளாகத்திற்குள் நுழையும் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட கணிசமாக குறைந்து தான் உள்ளது. குறிப்பாக,பட்டம் இல்லாத படிப்புகளில் 5 % குறைந்திருக்கிறது.
பின், எப்படி ஒட்டுமொத்த சர்வேதச மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்தது. இதற்கான, விளக்கமும் இந்த ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 223,085 STEM படிப்பை முடித்த மாணவர்கள் குறைந்தது 36 மாதம் அமெரிக்கா நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். படிப்பை முடித்து தற்போது 223,085 சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். எனவே, ஏற்கனவே இருக்கும் மாணவர்களையும் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதால் 2019ம் ஆண்டு சர்வேதேச மாணவர்கள் அதிக எண்ணிக்கை உயர்ந்தது போல் காட்டியுள்ளது.
சுருங்கச் சொன்னால், 2019ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் படிக்க நுழைந்த மானவர்கள் கடந்த ஆண்டை விட குறைவு. ஆனால், 2019ம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் சர்வேதச மானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.