Advertisment

நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி; இந்தியன் வங்கியின் சூப்பர் வாய்ப்பு; யூஸ் பண்ணிக்கோங்க பெண்களே!

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி; பெண்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jobs women

அரசு வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகு நகைகள் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி துவங்க உள்ளது.

இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஜூலை 18

இப்பயிற்சியில், மாநிலத்தை சேர்ந்த, 8 ம் வகுப்பு பயின்ற, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் முழுநேர பயிற்சியில் 90 சதவீதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பு புதுச்சேரி, குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment