IFS Exam Notification 2019 Released by UPSC: இந்திய வனத்துறை அதிகாரி பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை, யூ.பி.எஸ்.சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் upsconline.nic.in என்ற தளத்தை அணுகலாம்.
காலியிட விபரங்கள்
90
வயது வரம்பு
01.08.2019-ன் படி 21 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், ஜியாலஜி, கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு பிறகு நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
பிரிலிமினரி தேர்வு மையம்
சென்னை, கோவை, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் வனத்துறை அதிகாரிகளுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர் ரூ.100-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்
18.03.2019-ம் தேதிக்குள் upsconline.nic.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு upsconline.nic.in தளத்தை அணுகவும்.