/tamil-ie/media/media_files/uploads/2019/02/navy-1.jpg)
Indian Navy Released Admit Card for SSR, MR and AA Exams: இந்திய கடற்படை மாலுமிக்கான தேர்வின் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ தளமான joinindiannavy.gov.in-ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
சீனியர் செகண்டரி ரெக்ரூட், மேட்ரிக் ரெக்ரூட், மியூசிசியன், ஸ்போர்ட்ஸ் எண்ட்ரி, மற்றும் ஆர்டிஃபைசர் அப்ரெண்டிசஸ் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ தளத்தை விசிட் செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எப்படி டவுன்லோடு செய்வது?
joinindiannavy.gov.in என்ற தளத்தை அணுகி, லாக் இன் செய்துக் கொள்ளவும்.
அதில், ‘admit card for the Sailor exam’ என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய ஹால்டிக்கெட் திரையில் தோன்றும்.
விண்ணப்பதாரர்கள் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தேர்வு பிப்ரவரி 23, 2019 முதல் பிப்ரவரி 28, 2019 வரை நடக்கிறது.
தேர்வு முறை
கேள்வித்தாள் ஆப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள்கள் கொடுக்கப்படும்.
வினாத்தாள் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு என 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 25 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான தேர்வு நேரம் 1 மணி நேரம்.
தவறான கேள்விகளுக்கு பதிலளித்தால் நான்கில் ஒரு பங்கு நெகட்டிவ் மதிப்பெண்ணாக மாறும்.
விண்ணப்பதாரர்கள் அனைத்துப் பிரிவிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.