Advertisment

இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 490 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 490 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iocl jobs

இந்தியன் ஆயில் வேலை வாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னை ஏர்போர்ட்டில் 105 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

Trade Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

கல்வி தகுதி: Mechanical, - Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, Electronics பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 110

கல்வி தகுதி: Mechanical, - Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, Electronics பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Graduate Apprentice/Accounts Executive

காலியிடங்களின் எண்ணிக்கை: 230

கல்வி தகுதி: BBA/B.A/B. Com/B.Sc. படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 31.08.2023 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC(NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://iocl.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/4e36b7f0aead4da7a6979f32d23d5252.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment