Advertisment

இஸ்ரோ வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இஸ்ரோ நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 35 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ISRO’s Chandrayaan-3: From launch to landing, a complete guide in tamil

ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் டெக்னீசியன் மற்றும் வரைவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023

Advertisment

இதையும் படியுங்கள்: தேர்வு இல்லை; மருத்துவ துறையில் 95 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

TECHNICIAN

காலியிடங்களின் எண்ணிக்கை: 34

Fitter – 4

Machinist – 1

Electronics – 15

Information Technology – 5

ICTSM/ITESM – 5

Electrician – 1

Chemical – 1

Turner – 1

Refrigeration and Air Conditioning – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

DRAUGHTSMAN

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : மெக்கானிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21.08.2023 அன்று 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 21,700 – 69,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/SACRecruitment13.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_August/ADVT_SAC_03_2023_01Aug2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Isro Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment