scorecardresearch

1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலல் இந்தாண்டும் 1-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

It has been announced that all the students of class 1 to 8 have passed in Puducherry
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறுகின்றனர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்று இருந்ததால் அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8-ம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புதுச்சேரி கல்வித்துறை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: It has been announced that all the students of class 1 to 8 have passed in puducherry

Best of Express