Advertisment

ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு இந்த தேதிக்குள் விண்ணபிக்கலாம்: முழு விவரம் உள்ளே

புதுச்சேரி ஜிப்மர் இணையதளத்தில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜிப்மர் இயக்குனர் பதவி

ஜிப்மர் இயக்குனர் பதவி

புதுச்சேரி ஜிப்மர் இணையதளத்தில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து ஜிப்மர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு

 ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இதற்கு விண்ணப்பிக்க மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் மேலும் பத்து ஆண்டுக்கு குறையாமல் ஆராய்ச்சி துறையில் அனுபவம் இருக்க வேண்டும் மருத்துவம், அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுநிலை தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு  வயதிற்குள் இருக்க வேண்டும் .ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ நியமனத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம் தகுதி உடையவர்கள் நிர்வாக துணை இயக்குனர் அவர்களுக்கு  விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது . ஜிப்மர் இயக்குனராக  நியமிக்கப்படுபவர்கள்  இரண்டு ஆண்டு காலம் பதவி வைக்கலாம். ஆனால் இயக்குனராக இருந்த ராஜேஷ் அகர்வால் பதவிக்காலம் நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில் புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது  எனவே அவர் விரைவில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.   மேலும் ஜிப்மர்  இயக்குனரை மாற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி விழுப்புரம்  தொகுதியில் எம் பி ரவிக்குமார் ஜிப்மர் இயக்குனரை  மாற்றக் கோரி மத்திய அரசிடம் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர் ரங்கசாமி அடிக்கடி ஜிப்மர் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தனர் மத்திய அரசு போதுமான  நிதி ஒதுக்கியும் ஜிப்மர் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து ஜிப்மருக்கு எதிரான அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. புதுச்சேரி

ஜிப்மர் இயக்குனராக  ராகேஷ் அகர்வால்  கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார் அன்று முதல் ஜிப்மெரில் இந்தி கட்டாயமாக்கப்பட்ட பிரச்சினை எழுந்தது மேலும் இலவச  மற்றும் மருந்து மாத்திரை  நிறுத்தப்பட்டது மருந்து மாத்திரை தட்டுப்பாடு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தவிர மற்றவர்களுக்கு  உயர் சிகிச்சை கட்டணம் என்ன பல பிரச்சினைகளை ஜிப்மரில் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment